குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எவை எவை? என்னென்ன சாப்பிடலாம்?
குளிர் காலத்தில் நாம் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்? எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே தொற்று நோய்கள் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதுள்ள பனி அளவுக்கு அதிகமாக இருப்பதால் மிக எளிதாக சளி, இருமல், வைரஸ் தொற்று என ஏற்படுகின்றது. இந்த தொற்று தீவிரமடையும் தருணத்தில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தி, சுவாசிப்பதற்கு மிகவும் சிரமத்தினை ஏற்படுத்துகின்றது.
குளிர் காலத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்துகொள்வதுடன், சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

image: istock
எந்த உணவை எடுத்துக்கொள்ளலாம்?
குளிர்காலம் என்றால் பொரித்த மற்றும் சூடான உணவுகளை தான் பலரும் விரும்புகின்றனர். ஆதலால் புதிதாக சமைத்த உணவுகள் மற்றும் உடம்பிற்கு கதகதப்பினை கொடுக்கும் சூப் வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான நபர்கள் உடல் எடை அதிகரிக்கும் என்பதற்காக ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளைக் கூட தவிர்த்து வருகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் வாதம் ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளதால், சருமம் மற்றும் உடல் உறுப்புகள் வறட்சியடையாமல் இருப்பதற்கு சிறிதளவு நெய் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றினை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமாகவும், ஜீரண சக்தியையும் அளிக்கின்றது.

image: istock
எந்த உணவினை தவிர்ப்பது?
குளிர் காலத்தில் பால், சாதம் மற்றும் ஐஸ்கிரீம் இவற்றினை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். ஜீரண சக்தியை பலவீனப்படுத்துகின்றது.
அதுமட்டுமின்றி பரோட்டா, சப்பாத்தி போன்ற உலர்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவ்வாறான சின்ன சின்ன மாற்றங்கள் குளிர்கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |