வீட்டுல நெத்திலி கருவாடு இருக்கின்றதா? மலேசிய ஸ்டைல் இந்த கிரேவி செய்து பாருங்க
மலேசியாவில் பிரபலமாக இருக்கும் இகான் பிலிஸ் சம்பல் கிரேவியை அந்நாட்டு ஸ்டைலில் எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - 100 கிராம்
வெல்லம் - 1 துண்டு
உப்பு தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பூடு - 10 பல்
எண்ணெய் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு

செய்முறை
முதலில் நெத்திலி கருவாடை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு காய்ந்த மிளகாயை வெறும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றினை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கழுவி வைத்துள்ள கருவாட்டை சேர்த்து மொறுமொறுப்பாக நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் எண்ணெய் மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு புளி கரைசல் மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். பொரித்த கருவாடு மற்றும் உப்பு சேர்த்தால் மலேசியா ஸ்டைல் இகான் பிலிஸ் சம்பல் கிரேவி தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |