2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுங்க.. எண்ணற்ற நன்மையை பெறுவீங்க
இரண்டு வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
புரதச்சத்து, சைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் கொண்டு உணவுகளில் ஒன்று தான் முட்டை ஆகும். தசை வளர்ச்சியை ஆதரிப்பதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வையும் அளிக்கின்றது.
தினமும் முட்டை சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அந்த வகையில் அமெரிக்க மருத்துவர் ஒருவர் 14 நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையை குறித்து விளக்கியுள்ளார்.

நன்மைகள் என்ன?
முட்டையில் உள்ள கோலின் சத்தானது அசிடைல்கொலின் தயாரிக்க பயன்படுகின்றது. இவை நரம்பியல் கடத்தி ஆகும். நினைவாற்றல், கவனத்திற்கு முக்கியமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கொலஸ்ட்ரால் அதிகமாகும் என்று முட்டையை ஒதுக்கி வைக்க வேண்டாமாம். முட்டை சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அளவே மேம்படுமாம்.

கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் அதிகமாக இருக்கின்றதாம். இதன் மஞ்சள் கருவில் லுடின் மற்றும் ஜீயாக்சாண்டின் உள்ள நிலையில், இவை உயர் ஆற்றல் நீல ஒளியை வடிகட்டவும், கண் ஆரோக்கியத்தினை ஆதரிக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாகும்.

முட்டையில் சல்பர் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் உள்ள நிலையில், ஆரோக்கியமான முடி மற்றும் தோல், நகங்களுக்கு இன்றியமையததாகும். நீங்கள் சைவ உணவாளராக இருந்தால் சோயா வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
முட்டையில் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை ஒதுக்கி வைப்பது கூடாது. ஏனெனில் மஞ்சள் கருவில் தான் அதிகமாக ஊட்டச்சத்து இருப்பதாக மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |