கோடை வெயில் சுட்டெரிக்குதா? எதையெல்லாம் சாப்பிடணும் தெரியுமா?
கோடை வெயில் இப்போதே நம்மை வாட்டத் தொடங்கிவிட்டது, வெயில் அதிகம் இருப்பதால் நம் உடல் சூடாகி பல்வேறு நோய்களும் நம்மை தாக்கத் தொடங்கும்.
எனவே பருவநிலைக்கு ஏற்றவாறு நம் உணவு முறைகளிலிருந்து அனைத்தையும் மாற்றி நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்வது அவசியம்.
ஏனெனில் நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும், இதனால் உடல் சோர்வடைந்து மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் வர நேரிடும்.
எனவே இதனை தடுக்க சரியான நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
குறிப்பாக காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம்.
உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
சூரிய உதயத்துக்கு முன்னே எழுந்து குளித்து விடுவது நல்லது, வெளியில் செல்லும் போது தேவையான தண்ணீரை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
காபி, டீ அதிகம் குடிப்பதை தவிர்த்துவிட்டு, இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
டயட் இல்லாமல் உடல் எடையை சட்டென குறைக்கணுமா?
என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்
வெயில் அதிகமாக இருக்கும் போது, மண்பானை தண்ணீர் குடிக்கலாம், இது ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாய்வதை உறுதி செய்வதால், சோர்வை நீக்கும்.
இளநீர் குடிப்பதால் குளுக்கோஸ் அதிகம் கிடைத்து, உடனடி எனர்ஜியை வழங்குகிறது.
உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க லெமன் ஜூஸ் அருந்தலாம், இதில் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பருகினால் தலைச்சுற்றல் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.
சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.
இதுதவிர தர்பூசணி, வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் தினமும் எடுத்துக் கொள்வது அவசியம்.
மிக முக்கியமாக சாதாரண தண்ணீருக்கு பதிலாக சீரகம் கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை அருந்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள்
உடைகளில் கவனம் தேவை
பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல்.
எனவே ஆடைகளையும் இந்தக் காலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம்.
அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான்.
பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்தி ஆடைகளை உடுத்துங்கள்.
கண்களுக்குச் சூரியக் கண்ணாடி கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம், ஆயுர்வேத முறையில் தயாரான சன் ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும்.
சருமத்தை பராமரிக்க டிப்ஸ்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும், எண்ணெய் பசை உள்ளவர்களாக இருந்தால் முகத்தில் பருக்கள் அதிகம் வரும்.
இதை தடுக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது பேஸ்பேக்குகள் போடலாம்.
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாற்றை தடவலாம்.
கண்கள் உஷ்ணமாக இருந்தால் வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுங்கள், கண் எரிச்சல் சரியாகும்.
தர்பூசணி பழத்தில் கொஞ்சம் பால், சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் வைத்திருந்து முகத்தைக் கழுவிவிடலாம்.
இவை அனைத்தையும் விட முகத்தை அடிக்கடி கழுவுவது அவசியம்.
எலும்புகள் தேய்மானத்தை குறைக்கும் ஒரு உணவு பொருள்!