தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வழைப்பழத்தினை தொர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம்
அதிக சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். வருடத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் ஒரே பழமாகும்.
இதன் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் தாராளமாக வாங்கி சாப்பிடுகின்றனர். காலை மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் வாழைப்பழம் உடனடியான ஆற்றலை அளிக்கின்றது.
தொடர்ந்து 45 நாட்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
வெறும் 100 கிராம் வாழைப்பழத்தில் 89 KCAL, கொழுப்பு 0.33 கிராம், சோடியம் 1.மில்லி கிராம், கார்போஹைட்ரேட் 22.80 கிராம், நார்ச்சத்து 2.60 கிராம், புரதம் 1.09 கிராம், பொட்டாசியம் 358 மில்லி கிராம் காணப்படுகின்றது.

நன்மைகள் என்ன?
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தினை பாதுகாப்பதுடன், ரத்த அழுத்தத்தினை சீராக வைத்து தசை செயல்பாட்டிற்கு உதவி செய்கின்றது.
இதிலுள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உடலுக்கு உடனடியான ஆற்றலை வழங்குகின்றது.

மேலும் இதிலுள்ள வைட்டமின் பி6 மூளை ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், ஹார்மோன் சுரப்பை தூண்டி மனநிலையை சீராக்கவும் உதவி செய்கின்றது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலின் செல்களை பாதுகாப்பாக வைக்கின்றது, மேலும் உடலை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்து, பசி அதிகமாக ஏற்படுவதையும் குறைக்கின்றது.

ஆய்வுகள் கூறுவது என்ன?
தினமும் ஒரு வாழைப்பழம் வீதம் 45 நாட்களுக்கு எடுத்து வந்தால் இதன் ஊட்டச்சத்துக்கள் சீரான ரத்த அழுத்தத்திற்கும், மேம்பட்ட செரிமானத்திற்கும், இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவுகின்றது.

இதிலுள்ள அதிக கலோரி, ஏற்கனவே கலோரி அதிகமாக இருப்பவர்களுக்கு கூடுதல் கலோரியை உடலில் ஏற்ற வழிவகுத்து உடல் எடை அதிகரிக்கும்.
எனவே வாழைப்பழத்தினை தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டுமாம். தீவிர சிறுநீரக குறைபாடு இருக்கும் நோயாளிகளுக்கு பொட்டாசியத்தினை வெளியேற்றும் திறனையும் கொடுத்து, பொட்டாசியம் அளவு அதிகரிக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |