chanakya topic: இந்த மூன்று குணம் கொண்ட நண்பர்கள் வாழ்வையே அழித்துவிடுவார்கள்... ஜாக்கிரதை!
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக அறியப்படுகின்றது. இது ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே தொகுக்கப்பட்டது.
முன்னைய காலத்தில் இந்தியாவின் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.
அந்தவகையில் சாணக்கிய நீதியின் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில பழக்கங்கள் கொண்டவர்களுடன் நட்பு கொள்வது உங்களின் வாழ்க்கையை அழித்துவிடும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார். அப்பட்ட பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுய நலம் கொண்ட நண்பர்கள்
சாணக்கியரின் கருத்துப்படி சுயநலம் கொண்ட நண்பர்களிடமிருந்து எப்போகும் விலகியிருக்க வேண்டும்.
இவர்கள் உங்கள் வாழ்வில் கஷ்டமான சூழ்நிலைகளில் உடன் இருக்க மாட்டாார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் தங்களின் தேவை முடியும் வரையில் நண்பர்கள் போல் தோற்றமளிப்பார்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து மாத்திரமே சிந்திக்கும் நபர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வது வாழ்கையையே அழித்துவிடும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
முட்டாள் நண்பர்கள்
முட்டாள் தனமாக சிந்திக்கும் நபர்களுடன் நட்பு கொள்வது உங்களை பாரிய ஆபத்தில் கொண்டுப்போய்விடும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
முட்டாள் நண்பனை பார்க்கிலும் புத்திசாலித்தனமான எதிரி மேலானவன் என பெரியர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். காரணம் எதிரியின் புத்திசாலித்தனம் நம்மை விழிப்புடன் வைத்திருக்கின்றது.
ஆனால் முட்டாள் நண்பர்களை கூடவே வைத்திருப்பது, உங்களின் முன்னேற்றம் மற்றும் அறிவாற்றலை மங்கச்செய்து உங்களையும் முட்டாளாக்கிவிடும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
தீய பழக்கங்கள் கொண்ட நண்பர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் தவறான பழக்கங்கள் உள்ள ஒருவருடனான நட்பு வைத்திருப்பது எல்லாவற்றையம் விட ஆபத்தானது.
தீய பழக்கங்கள் எவ்வளவு மகிழ்ச்சியளிக்கின்றதோ அதைவிட அதிகமான பிரச்சினைகளையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
இப்படிப்பட்டவர்களின் நட்பு உங்களின் நற்பெயருக்கு மட்டுமின்றி உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
