ஜாகிர் ஹுசைனுக்கு உருக்கமான வரிகளில் அஞ்சலி செலுத்திய சோபிதா துலிபாலா... வைரலாகும் பதிவு
நடிகை சோபிதா துலிபாலா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மறைவிற்கு இரங்கள் தெரிவித்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற் போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜாகீர் உசேன் மறைவுக்கு நடிகை சோபிதா துலிபாலா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.தேவ் படேலின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மன்கி மேன்’ படத்தில் உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞருடன் சோபிதா திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஜாகிர் உசேன்
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று காலமானார். இந்தியாவின் இசைப் பாரம்பரியத்தில் தபேலாவுக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது.அந்த தபேலாவை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த கலைஞர்களில் மிக முக்கியமானவர் தான் ஜாகிர் உசேன்.
தனது அபார திறமையாலும், இசை ஞானத்தாலும், புதுமையான அணுகுமுறையாலும், உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களைக் கவர்ந்த தலைசிறந்த தபேலா வித்துவான்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மோசமான உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினைகளால் பாதிபக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஜாகிர் உசேன் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் காலதானார். இவரின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா, ஜாகிர் ஹுசைனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மறைபொருளான வசனத்தைப் பகிர்ந்துள்ளார். 'எனது மௌனங்களை வடிவமைத்தில் உங்களின் செல்லாக்கு' அளப்பரியது அதற்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டு தனது இரங்களை தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |