சாணக்கிய நீதி: இந்த 4 குணங்கள் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்பதை பறைசாற்றுகிறது!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகைளையும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது தான் சாணக்கிய நீதி நூல்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.தற்காலத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் துளியளவும் குறையவே இல்லை.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில குணங்கள் ஆண்களை விடவும் பெண்கள் வலிமையானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருப்பதற்கு காரணமாகின்றது. அப்படிப்பட்ட உன்னத குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புத்திசாலித்தனம்
சாணக்கியரின் கருத்துப்படி ஆண்களை விடவும் பெண்கள் எப்போதும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
ஆண்களின் அறிவாற்றலுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 4 மடங்கு வேகமாகவும் தெரிவாகவும் நிந்திக்கக்கூடியவர்கள் என்கின்றார்.
வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கலான தருணங்களையும், பிரச்சினைகளையும் ஆண்களை விட பெண்கள் எளிமையாக கடந்து செல்வார்கள்.
மனதளவில் வலிமையானவர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில், ஆண்கள் உடல் அளவில் வலிமையானவர்களாக இருந்தாலும் பெண்கள் மனதளவில் அதைவிடவும் வலிமையானவர்கள் என்கின்றார்.
எந்தவொருசவாலான சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறுவதில் ஆண்களை விட பெண்கள் அதிக திறன் கொண்டவர்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
ஆளுமை அடிப்படையில் ஆண்களை விட எப்போதும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். பெண்கள் இல்லாமல் வாழ்வது ஆண்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
ஆனால், பெண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள் இவர்களால் தனித்து நின்று சாத்திக்க முடியும் என்பதே மெய் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
தைரியசாலிகள்
ஆண்களை பலசாலிகளாக இருக்கின்ற போதிலும் பெண்களிக் அசாத்திய தைரியமானது அவர்களை ஆண்களை விடவும் சிறந்தவர்களாக காட்டுகிறது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
ஆண்களை விட பெண்களுக்கு எந்த பிரச்சினையையும் தனித்து நின்று சமாளிக்கும் திறன் அதிகமாக காணப்படுகின்றது.
பெண்களின் பாசம் தன் குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு செல்லக்கூடியது. ஆண்களுக்கு இந்த குணம் இருப்பது அரிது என்கின்றார் சாணக்கியர்.
பசியைத் தாங்கிக் கொள்ளும் குணம்
பெண்கள் ஆண்களை விட தங்கள் பசியைத் தாங்கிக் கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
ஆண்களை விட அதிக பசியுடன் இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் எனவும், ஆண்களை விட அதிகமாக உழைப்பவர்கள் பெண்கள் தான் எனவும் தியாகம் செய்பவர்களும் பெண்களாகவே இருக்கின்றார்கள் என குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |