திருமணத்துக்கு முன்னரே பெண்ணிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க... எச்சரிக்கும் சாணக்கியர்!
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவரே ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியில் குடும்ப வாழ்க்கை தொடக்கம் அரசியல்,பொருளாதாரம்,ஆன்மீகம் என அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் தெளிவான அறிவுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஒரு ஆண் திருமணத்துக்கு முன்னர் தனக்கு மனைவியாக வரும் பெண்ணின் குணங்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படிப்பட்ட பெண் சிறந்தவள்?
சாணக்கியரின் கூற்றின் அடிப்படையில் பெண்களின் அழகை காட்டிலும் அறிவு தான் மிகவும் முக்கியதும் வாய்ந்தது.
திருமணம் செய்துக்கொள்ளும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பெரும்பாலான ஆண்கள் நினைக்கின்றனர் ஆனால் பெண்களுக்கு அழகை விடவும் அறிவு முக்கியம்.
எனவே திருமணம் செய்துக்கொள்ளும் பெண் புத்திசாலியாக இருந்தால் அழகாக இல்லாவிட்டாலும் அவர் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றுவார்.
அறிவாற்றல் இல்லாத பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதனால் ஒரு பயணும் விளையப்போவதே இல்லை. என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் திருமணத்துக்கு முன்னரே பெண்ணின் குடும்பப் பின்னணி தொடர்பில் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பெண்ணின் குடும்பப் பின்னணி மோசமாக இருக்கும் பட்சத்தில் அந்த சூழவில் வளர்ந்த பெண் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடும்.
திருமணத்துக்கு முன்னரே பெண்ணின் குணம் தொடர்பில் நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும் டின சாணக்கியர் குறிப்பிடுகின்றார். காரணம் அமைதியற்ற முரட்டு குணம் உள்ள பெண்கள் முரட்டுத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் மோசமாகவும் நடந்துகொள்வார்கள்.
இந்த குணம் திருமண வாழ்வை நரகமாக மாற்றிவிடுகின்றது. இப்படியான பெண்கள் எவ்வளவு அழகானவர்களாக இருந்தாலும் அவர்களை தவிர்த்துவிடுவது நல்லது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
பொய் பேசும் பழக்கம் கொண்ம பெண்களை திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்கின்றார் சாணக்கியர்.
அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பொய்களால் நிரப்பிவிடுவார்கள். பொய் சொல்லும் குணம் கணவனுக்கு எதிராகவும் பொய் சொல்லும் வாய்ப்பை உருவாக்கும். திருமணம் செய்துக்கொள்ளும் பெண் உண்மையுள்ளவராக இருக்க வேண்டியது எல்லாவற்றையும் விடவும் முக்கியமானது.
விசுவாசம் மற்றும் நேர்மை இல்லாத பெண்கள் எப்போது வேண்டும் என்றாலும் கணவனுக்கு எதிரான துரோகங்களை செய்ய வாய்ப்பு காணப்படுகின்றது. இது திருமண வாழ்க்கையை அழித்துவிடும் என்பதால் இந்த குணங்கள் பற்றி திருமணத்தின் முன்னரே அறிந்திருக்க வேண்டும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |