எச்சரிக்கும் சாணக்கியர்! இந்த நபர்களிடமிருந்து எப்போதும் தூரமாக இருங்கள்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதி வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளது. இதன் பிரகாரம் வாழ்வில் குறிப்பிட்ட சில குணம் கொண்ட நபர்களை எப்போதும் தூரமாக வைக்க வேண்டும் சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
காரணம் இந்த குணம் கொண்டவர்கள் தங்களுக்கு தீமை இழைத்துக்கொள்வது மட்டுமன்றி தங்களுடன் இருப்பவர்ககளையும் பிரச்சினையில் தள்ளிவிடும் வாய்பு காணப்படுகின்றது. இப்படிப்பட்ட குணம் கொண்ட நபர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இவர்களிடமிருந்து ஒதுங்கியிருங்கள்...
சாணக்கியரின் கருத்துப்படி சிறிய விஷயங்களுக்கும் அதிகமாக கோபப்படும் குணம் கொண்டவர்கள் தங்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் கோபத்தை தூண்ட காரணமாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை பக்கத்தில் வைத்திருந்தால் நீங்கள் பல்வேறு வகையிலும் மன அழுத்தத்துக்கும் உடல் உவாதைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும்.
எல்லா விடயங்களுக்கு அதிகமாக கோபப்படும் குணம் கொண்டவர்கள் அவர்களின் தவறுகள் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் எப்போது வேண்டுமானால் வெடிக்கும் வெடிகுண்டு போன்றவர்கள் எனவே இவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி சுயநலவாதிகளிடமிருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும்.இந்த குணம் கொண்டவர்கள் எப்போதும் தங்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை எப்படி தங்களின் தேவைக்கு உபயோகித்துக்கொள்ளலாம் என மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த நேரத்திலும் தங்களின் தேவைக்காக மற்றவர்களுக்கு தீங்கு செய்யலாம் எனவே இந்த குணம் கொண்டவர்களை எப்போதும் தூரமாக வைக்க வேண்டும்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் பொய் சொல்பவர்கள் நல்ல நோக்கத்திற்காக பொய் சொல்ல தயங்கக்கூடாது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார், சாணக்கியரும் ஒரு நல்ல நோக்கம் கருதி பொய் சொல்லுவதில் எந்த பிழையும் இல்லை ஆனால், தங்களின் நலனுக்காக எந்த பொய்யையும் சொல்ல தயாராக இருப்பவர்களிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது.
சாணக்கியரின் கூற்றுப்படி முகஸ்துதி செய்பவர்களிடமிருந்து எப்போதும் தூரமாக இருக்க வேண்டும் என்கின்றார்.அதாவது முகத்துக்கு முன்னால் நல்லவிதமாக பேசிவிட்டு நாம் அந்த இடத்தில் இருந்து நீங்கியதுமே நாம்மை பற்றி எதிர்மறையான விடயங்களை பேசும் குணம் கொண்டவர்களிடமிருந்து எப்போதும் தூரமாக இருப்பதே உங்களின் முன்னேற்றத்துக்கு நன்மை பயக்கும் என்கின்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ரகசியங்களை காப்பாற்றும் குணம் இல்லாதவர்களை அருகில் வைத்துக்கொள்ளவே கூடாது. இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் உங்களை பற்றிய விடயங்களை இவர்களிடம் பகிர்வதால் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படிப்படவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என சாணக்கியர் வலியுறுத்துகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |