சிரியாவில் பின்பற்றப்படும் வேடிக்கையான மூடநம்பிக்கைகள்! இதையெல்லாமா நம்புவாங்க?
விண்ணை முட்டும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சியடைந்திருந்தாலும் ஏராளமான புதிய கண்டுப்பிடிப்புகள் நாளுக்கு நாள் அறிமுகமாகினாலும் இன்னும் பெரும்பாலான மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது நிதர்சனம்.
மூடநம்பிக்கை எனப்படுவது எந்தவிமான சம்பந்தடும் இல்லாமல் இரு விடயங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு ஆதாரமற்ற போதிலும் நம்பும் நிலையை குறிக்கும்.
பொதுவாக எல்லா நாடுகளிலுமே மூடநம்பிக்கைகள் இருப்பது வழக்கம் தான். ஆனால் மிகவும் வேடிக்கையான வகையில் சிரியா நாட்டு மக்கள் பின்பற்றுகின்ற மூடநம்பிக்கைகள் பார்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் நிறைந்த நாடான சிரியாவில் நிறைய மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றது. இதில் மிகவும் பிரபல்யமான ஒரு சில மூடநம்பிக்கைகள் குறித்து இந் பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
சிரியாவின் பிரபலமான மூடநம்பிக்கைகள்
1. ஆமையின் அதிர்ஷ்டம்
சிரியாவில் ஆமை மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட உயிரினமான பார்க்கப்படுகின்றது. ஆமைகளின் நீண்ட ஆயுள்காலம் காரணமாக இவை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக திகழ்கின்றது.
சிரிய மக்கள் தங்களின் வீடுகளில் ஆமை சிலைகள் அல்லது படங்களை வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள்.
அதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதாகவும் செல்வ செழிப்பை ஈர்க்க முடியும் எனவும் சிரிய மக்கள் தொன்று தொட்டு நம்பிவருகின்றனர். மேலும் இந்த வழக்கத்தை பல தலைமுறைகள் தாண்டியும் பின்பற்றி வருகின்றனர்.
2. காபி வாசிப்பு
சிரியாவில் பின்பற்றப்பட்டு வரும் மிகவும் வேடிக்கையான மூடநம்பிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது ஒரு கப் காபியைக் கொண்டு ஒருவரது அதிர்ஷ்டத்தை கணிக்கும் முறை ஆகும்.
இந்த முறையில் அதிர்ஷ்டத்தை கணிக்க வேண்டிய நபரிடம் ஃபில்டர் காபியை குடிக்க கொடுத்து இவர் குடித்து முடித்த பின்னர் அந்த காபி கப்பை தலைகீழாக கவிழ்த்து வைக்குமாறு குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த கப்பை திருப்பி பார்த்து அதில் உள்ள சின்னங்களைள் அல்லது குறியீடுகளைக் பார்த்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து கணிக்கப்படுகின்றது.
3. வலது காலால் வீட்டிற்குள் செல்வது
இந்த நடைமுறை இந்தியர்களாலும் பின்பற்றப்டும் ஒரு மூடநம்பிக்கையாகும். இது பல தலைமுறைகளாக சிரியாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வீட்டிற்குள் நுழையும் போது வலது காலால் நுழைவதால் அது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.அதனால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
4. காதுகளில் சப்தம் கேட்பது
காதுகளில் சப்தம் கேட்பது அதிர்ஷ்டத்தின் அடையாளம் என சிரிய நாட்டு மக்கள் நம்புகின்றார்கள். அதுமட்டுமன்றி எந்த காதில் சப்தம் கேட்கிறதோ, அதைப் பொறுத்து அதற்கான பலன்களும் வேறுப்படுகின்றது.
வலது காதில் சப்தம் கேட்பதால், யாரோ உங்களைப் பற்றி நன்றாக பேசுகிறார் என்றும் இடது காதில் சப்தம் கேட்பதால், உங்களைப் பற்றி யாரோ தவறாக பேசுகிறார்கள் என்று நம்பிவருகின்றார்கள்.
5. கத்தரிக்கோல் திறந்து வைப்பது
வீடுகளில் கத்தரிக்கோலை பயன்படுத்தி விட்டு திறந்து வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
சிரியாவில் மக்கள் கத்தரிக்கோலை தவறியும் திறந்து வைக்க பயப்படுவார்கள் இதனை வேறு நாட்டவர்கள் பார்த்ததால் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் சிரிய மக்கள் அதனை பெரிதும் நம்புவார்கள்.
6. கையை அரித்தால் பணம் வரும்
உள்ளங்கை அரித்தால் பணக்காரர் ஆகலாம் என்ற கருத்து பெரும்பாளான நாட்டு மக்களிடம் காணப்டுகின்றது.
சிரிய மக்கள் எந்த கை அரிக்கின்றது என்பதை கொண்டு அதனை நிதி ஆதாயம் அல்லது இழப்புடன் தொடர்புப்படுத்தி நம்பி வருகின்றனர். அந்த வகையில் வலது கை அரித்தால், பணம் கிடைக்கப்போகின்றது என்றும் அதுவே இடது கை அரித்தால், நிதி இழப்பு ஏற்படும் என்று நம்புகின்றார்கள்.
7. காபி கொட்டுப்படுவது
சிரிய நாட்டில் காணப்படும் மூடநம்பிக்கைகளின் படி, ஒருவர் எதிர்பாராதவிதமாக காபியை கொட்டினால், அது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என இவர்கள் மத்தியில் மிகப்பெரும் நம்பிக்கை காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |