ஹனிமூனில் நாக சைதன்யா: குழந்தையாகவே மாறிய நடிகை சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள்
குழந்தைகளுடன் விளையாட்டு தினத்தை கொண்டாடி நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தற்போது ஐஸ்லாந்துக்கு ஹனிமூனில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் குழந்தைகளுடன் விளையாட்டு தினத்தை கொண்டாடிய நடிகை சமந்தா தானும் குழந்தையாகவே மாறி அவர்களுடன் விளையாடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |