பாம்புக்கும் கீரிக்கும் தொன்று தொட்டு என்ன பகை? வியக்க வைக்கும் அறிவியல் காரணம்
பாம்புகள் மற்றும் கீரிகளுக்கான பகை பற்றிய கதைகள் மிகவும் பிரபலமானவை. பாம்பும் கீரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் அவர்களுக்குள் போர் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இருவருக்குள்ளும் ஏன் இந்த பகை என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கீன்றீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் இவைகள் ஒன்றையொன்று விரும்பவில்லை? எந்த காரணடும் இல்லாமல் இவ்வளவு பகை உணர்வு எப்படி வந்திருக்க முடியும்?
கீரி மற்றும் பாம்பு இரண்டையும் எதிரியாகவே இயற்கை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் இயற்கையான உள்ளுணர்வு.அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
கீரி பாம்பை அசுரவேகத்தில் தாக்குகிறது. கீரி பாம்பை தாக்கும் போது ஒரு போராட்ட களத்தையே அங்கு பார்க்க கூடியதாக இருக்கும்.
இதற்கு பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. முக்கியமாக பாம்புகளில் காணப்படும் விஷம் கீரியை பாதிக்காது எனவும் கூறப்படுகிறது. இதுவே விஷம் கொண்ட பாம்புகளை பார்த்து கீரிகள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
இது தவிர, கீரி மிகவும் சுறுசுறுப்பானது, அது பாம்பிடமிருந்து தப்பிக்க பல வகையான சூழ்ச்சிகளை பின்பற்றுகிறது. மேலும் பொரும்பலான சண்டையில் கீரியே வெல்கிறது.சண்டையில் களைத்துப் போன பாம்பின் தலையை குதறி கொன்று விடுகிறது.
கீரி தனது குட்டிகளை காக்க போராடுகிறது பாம்பை தாக்காமல் விட்டு விட்டால், தன் குழந்தைகளை அதாவது சிறிய கீரிகளை கடித்து தின்றுவிடும் என்று கீரி நினைப்பதாக அறிவியல் ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது.
ஏனெனில் பாம்புகளுக்கு கீரி குட்டிகளை உணவாக உண்பது மிகவும் பிடிக்கும், இதனால் தான் கீரி தனது குழந்தைகளை காப்பாற்ற பாம்புகளுடன் சண்டையிடுகிறது என் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எப்போதும் கீரி வெல்வது ஏன்?
கீரி மற்றும் பாம்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தில், கீரியின் தீவிரமான வேகம், சுறுசுறுப்பு மற்றும் விஷ எதிர்ப்பு தன்மை காரணமாக பெரும்பாலான சமயங்களில் இந்த போரில் கீரி வெல்கின்றது.
கீரியின் அதிக வெற்றி விகிதத்துக்கு கீரிகளிடம் காணப்படும் வீழ்த்தும் திறன் மற்றும் விஷத்திற்கு அதன் உயிரியல் எதிர்ப்பு ஈடுக்கும் தன்மை போன்றன முக்கிய காரணமாக அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |