தொங்கும் தொப்பைக்கு இந்த பொடி போதும் - வாரம் நான்கு முறை சாப்பிடுங்க
உடல் எடை அதிகமாக இருக்கும் பட்ஜத்தில் அதை குறைக்க முடியாத போது இந்த பொடி செய்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறைவதை உணரலாம்.
உடல் எடை குறைக்க பொடி
தற்போது மக்களின் பழக்க வழக்கத்தின் காரணமாக பலரும் பல வித மருந்துகளை உட்கொள்வது உடற்பயிற்ச்சி செய்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் சிலருக்கு உடற்பயிற்ச்சி செய்வதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். சிலர் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாமல் கெட்ட கொழுப்பை வளர்த்து வைத்திருப்பார்கள்.
உடலில் தேவையற்ற இடத்தில் தாறுமாறாக கொழுப்பு படிவதால் தான் உடல் எடை அதிகமாகிறது. அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைக்கும் ஒரு பொடியை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் அந்த பொடி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கொள்ளு 1 கப்
- உளுத்தம் பருப்பு ¼ கப்
- கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 10 முதல் 15 (காரத்திற்கேற்ப)
- கறிவேப்பிலை
- பெருங்காயம்
- உப்பு

செய்முறை
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து லேசான தீயில் நன்கு வாசம் வரும் வரை அது சிவந்த பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை வறுக்கவும்.
இதை அப்படியே செய்தால் தான் பொடிக்கு ஒரு தனிசுவை கிடைக்கும். வறுத்த கொள்ளை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அடுத்து, அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்க்காமல், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

இதில் மிளகாயின் காம்புகளை நீக்கிய பின்னரே வறுக்க வேண்டும். இறுதியாக, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
அனைத்து பொருட்களும் நன்கு ஆறிய பின்னரே அனைத்துப் பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, பொடியாக அரைக்கவும்.

இந்தப் பொடியை மிகவும் நைஸாக இல்லாமல், சற்று கொரகொரப்பாக அரைப்பது கூடுதல் சுவை தரும். அரைத்த கொள்ளுப் பொடியை காற்றுப் புகாத கண்ணாடி டப்பாவில் சேமித்து வைத்து, சூடான இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துப் பரிமாறவும்.
இதை நீங்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் அப்படி இல்லையேல் குறைந்தது வாரத்தில் நான்கு முறை ்சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் கட்டுகோப்பாக இருக்கும். ஏனென்றால் 'இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பதால் தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |