சளி, இருமல் காய்ச்சலை ஓட ஓட விரட்டும் சூப்... வெறும் 10 நிமிடம் போதும்
காய்ச்சல் சளி பிரச்சினையை ஓட ஓட விரட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய சூப் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் 1
தக்காளி 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மல்லிஇலை - சிறிதளவு

செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் இவற்றினை நன்றாக உரலில் போட்டு தட்டி அரைத்துக் கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாசனை இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியினை சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு, சூப்பிற்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதனை மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து கொதித்த பின்பு, சூப் சற்று திக்காக வந்த பின்பு மல்லிஇலை தூவி இறக்கவும்.
இதே சூப்பினை சிக்கன் சேர்த்து சிக்கன் மிளகு சூப்பாகவும் செய்து சாப்பிடலாம். பனி மற்றும் மழை காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் இவற்றிற்கு நல்லதொரு தீர்வை கொடுக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |