டீயில் வெந்தயம் போட்டு குடித்தால் என்ன நடக்கும்? சர்க்கரை வியாதியுள்ளவர்கள் குடிக்கலாமா? தெரிஞ்சிக்கோங்க!!
பொதுவாக வீடுகளில் சமையலறை பொருட்களில் வெந்தயமும் இருக்கும்.
இதன்படி, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது.
ஏனெனின் மருந்தால் குணப்படுத்த முடியாத சில நோய்களை வெந்தயம் குணப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
வெந்தயம் கலந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொண்டால் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இந்த ஜென்மத்துக்கு வராது.
வெந்தயத்தை தினச்சரி எடுத்து வந்தால் உடல் எடையை குறையும் அத்துடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படும்.
அந்த வகையில் காலையில் குடிக்கும் டீயில் ஒரு கரண்டி வெந்தயம் போட்டு குடித்தால் என்ன நடக்கும் என்பதனையும், வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்பதனையும் தெரிந்து கொள்வோம்.
Image - tamil webdunia
தேவையான பொருட்கள்
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 கப்
- தேன் - 1 தேக்கரண்டி
- துளசி இலைகள் - ஒரு கைப்பிடி
- தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)
வெந்தய டீ தயாரிப்பு முறை
முதலில் தேவையானளவு வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒர பாத்திரத்தை வைத்து அதில், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூள் ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் நிறம் மாறியிருக்கும். அப்போது ஒரு டம்பளரில் டீயை வடிக்கட்டி கொள்ளவும்.
இறுதியாக தேன் கலந்து பரிமாறினால் சுவையான வெந்தய டீ தயார்!
தினமும் குடித்தால் என்ன நடக்கும்?
1. உடலிலுள்ள கொழுப்பை கரைத்து இதயத்தை பாதுக்காக்கின்றது.ஏனெனின் வெந்தயத்தில் இதயத்தை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கின்றது.
2. திடீரென ஏற்படும் அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் ஆகிய பிரச்சினைகளை குறைக்கின்றன. அத்துடன் செரிமான பிரச்சினையிருந்தால் அதையும் சரிச் செய்து விடுகிறது.
3. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் உடலில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை கணிசமாகக் குறைக்க உதவியாக இருக்கின்றது.
4. வெந்தயத்தில் புரதச்சத்துக்கள் அதிகளவு இருக்கின்றது. இது ஹார்மோன் ஆரோக்கியத்தை பாதுக்காக்கின்றது. உடலிலுள்ள தசைகளை கட்டுபடுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |