நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த இலையை சாப்பிடுங்க
உங்கள் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது தேவையான அளவு பயன்படுத்த முடியாது போனால் அதையே நீரிழிவு நோய் என்கிறோம்.
போதுமான இன்சுலின் இல்லாதபோது அல்லது செல்கள் இன்சுலினுக்கு பதிலளிப்பதை நிறுத்தினால், அதிகப்படியான இரத்த சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருக்கும்.
காலப்போக்கில், இது இதய நோய், பார்வை இழப்பு மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
யாருக்கெல்லாம் நீரிழிவு நோய் ஏற்படுகிறது?
நீங்கள் 45 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால், அல்லது அதிக எடை அல்லது உடல் பருமன் இருந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக்/லத்தீன், அமெரிக்க இந்தியர்கள், ஆசிய அமெரிக்கர்கள் அல்லது பசிபிக் தீவுவாசிகளுக்கு நீரிழிவு நோய் மிகவும் பொதுவானதொன்றாக கருதப்படுகிறது.
image credit: samayam tamil
நீரிழிவிற்கு எதிரியான இன்சுலின் இலை!
காஸ்டஸ் ஐஜியஸ்,பொதுவாக இது இன்சுலின் இலை என்று அழைக்கப்படுகிறது, இது கோஸ்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
இதன் இலைகளை உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த தாவரத்தின் இலைகளை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த குளுக்கோஸ் ஏற்படும் குறைவினை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய பாரம்பரிய மருத்துவ முறைப்படி காஸ்டஸ் இக்னியஸானது நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு நரம்பியல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த தாவரத்தின் இலைகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இன்சுலின் இலையினை உண்பதால் ஏற்படும் நன்மைகள் சமிபாட்டு பிரச்சினைகளை சரி செய்கிறது.
பக்டீரியா தொற்றுக்கு எதிர்ப்பாகவும் இது செயற்படுகிறது.மேலும் இது இயற்கையான ஆன்டி-ஆக்சைடாகவும் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை போக்கக்கூடியதாகவும் இருக்கிறது.மேலும் இன்சுலின் இலையானது சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை காக்கவல்லது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இன்சுலின் இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
இன்சுலின் இலைகளை பொடியாக அரைத்து தினமும் தண்ணீரோடு கலந்து குடிக்கலாம்.
இன்சுலின் இலைகளை மென்று சாப்பிடலாம்.
மேலும் வேகவைத்த இலைகளை சாப்பிடுவதும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.