உடல் எடையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த ஒரு கஞ்சி போதும்
உடல் எடையைக் குறைப்பதற்கு பெரும்பாலான நபர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எடையைக் குறைக்கும் கஞ்சியைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
நாம் தற்போது சாப்பிடும் அரிசியில் கஞ்சி செய்வதை விட மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி செய்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி - அரை கப்
உளுந்தம் பருப்பு - அரை கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
கேரட் - 1
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
இஞ்சி - சிறிதளது
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 3
தேங்காய் - ஒரு கப்
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய், தேங்காய் இவற்றினை கொரகொரப்பாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் அரிசியை சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு உளுந்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து, இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தினை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து பீன்ஸ் கேரட், உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பின்பு அதில் கஞ்சிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து, மேலும் பொடியாக அரைத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு இவற்றினையும் சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்றாக கிளறவும்.
மிதமான தீயில் வைத்து நன்றாக கொதித்ததும், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தேங்காய், இஞ்சி, பூண்டு இவற்றினை சேர்த்து ஒரு மூன்று நிமிடம் நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், சம்பா அரிசி, உளுந்தம் பருப்பு கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |