Diwali Special: ஆட்டுக்கால் பாயா ஒரு முறை இதை சேர்த்து செய்ங்க
இந்த தீபாவளிக்கு வீட்டில் காலையில் கண்டிப்பாக ஏதாவது ஷ்பெஷலாக செய்ய வேண்டும் என ஆசைப்படுவீர்கள். அப்படி ஆசைப்படுபவர்கள் ஆட்டுக்கால் பாயா ஒரு முறை செய்து பாருங்கள்.
இந்த ரெசிபி தென்னிந்தியாவில் விரும்பப்படும் ஒரு சூப் வகையாகும். இதில் ஆட்டுக்கால்களும் மசாலாப்பொருட்களும் சேர்த்து செய்கின்றனர்.
இதை பரோட்டா இடியப்பம் இட்லி போன்ற உணவுகளுடன் சுடசுட பரிமாறினால் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் – 4
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp
- தேங்காய் துருவல் – ½ கப்
- சோம்பு – 1 tsp
- சீரகம் – 1 tsp
- மிளகு – ½ tsp
- கசகசா – 1 tsp
- பச்சை மிளகாய் – 2
- பட்டை – 1துண்டு
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 1
- கருவேப்பிலை – சில
- உப்பு – தேவைக்கு
- எண்ணெய் – 2 tbsp
செய்யும் முறை
மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து மசாலா பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து லேசாக கிளறவும்.
வேகவைத்த ஆட்டுக்காலை அதே வேகவைத்த தண்ணீரோடு சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் குக்கரை மூடி 1 விசில் வர விட்டு இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |