பானை மாதிரி தொப்பை இருக்கின்றதா? ஒரே ஒரு இலை செய்யும் அற்புதம்
இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல வழிகளில் முயற்சிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு அதிக சிரமப்படுபவர்கள் நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சில இலைகளே உடல் எடையை குறைக்கும் என்பதை அறியவில்லை.
ஆம் உடல் எடையைக் குறைப்பதற்கு சிரமப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இலைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்கலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பல வீடுகளில் சாப்பிடும் போது ஓரமாக எடுத்து வைத்துவிடுவதை அவதானித்திருப்போம். இனி அவ்வாறு நீங்கள் செய்யாமல், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை உட்கொண்டால், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதுடன், உடலில் கொழுப்பும் குறையும்.
புதினா இலைகள்
பசியை கட்டுப்படுத்தும் புதினா இலைகளும் உடல் எடையைக் குறைக்க அதிகம் உதவியாக இருக்கின்றது. இவற்றினை காலை வெறும் வயிற்றில் உட்கொண்டால் மாற்றங்களை காணலாம்.
கொத்தமல்லி
பல வீடுகளில் அனைத்து வகையான குழம்பு, கிரேவிக்கு பயன்படுத்தும் மல்லித்தழை அதிக ஆரோக்கியத்தை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் இதில் ஏராளமாக உள்ளன.
தினமும் காலையில் வெற்று கொத்தமல்லி தண்ணீரைக் குடிப்பதால், உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து, எடை குறைய உதவுகிறது.