வாரத்திற்கு இரண்டு முறை விரதம் இருங்க! ஏகப்பட்ட அதிசயம் நடக்கும் தெரியுமா?
வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடாமல் விரதம் மேற்கொண்டால் உடம்பில் நடக்கும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விரதம் இருப்பதல் என்ன பயன்?
வாரத்தில் இரண்டு முறை சாப்பிடாமல் விரதம் இருப்பதால் உடம்பில் கலோரிகள் அதிகம் சேர்வது குறைவதுடன், எடை இழப்பும் ஏற்படுகின்றது.
இவ்வாறு விரதம் மேற்கொள்ளும் போது ஏற்கனவே சேமிக்கப்பட்ட கொழுப்பை உடல் ஆற்றலுக்காக பயன்படுத்த தொடங்குவதுடன், கொழுப்பும் குறைவதற்கும் உதவுகின்றது.
மேலும் செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றது.
உடம்பில் நச்சுத்தன்மை நீக்குவதை மேம்படுத்தவும், சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகின்றது.
விரதத்தின் போது உடலின் செரிமான அமைப்பு ஓய்வெடுப்பதுடன், தன்னை மறுசீரமைக்கவும், சுத்தப்படுத்தவும் நேரம் கொடுக்கின்றது.
Image: iStock
செரிமான சக்தியை அதிகரிப்பதுடன், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கவும், வயிற்று பிரச்சனைகளும் சரியாகும்.
மூளையில் நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மன அமைதியையும் கொடுப்பதுடன், மன அழுத்தம் மற்றும் கவலையையும் குறைக்கின்றது.
சாப்பிடாமல் இருக்கும் போது பழைய செல்கள் பழுதடைந்து புதிய செல்கள் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றலையும் அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |