Selavu Rasam:சளி இருமலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காரசாரமான கொங்கு நாட்டின் செலவு ரசம்
பொதுவாக உணவுகள் பசிக்காகவும் சுவைய்யாகவும் சாப்பிடப்படுகின்றது. ஆனால் சில உணவுகள் நமத உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் தான் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும்.
உணவுகளில் கொங்கு நாட்டு உணவு என்றால் இது மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் பிரபலமானவை.கொங்கு மாவட்டங்களில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு இன்றளவும் மிகுந்த சுவை இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் கொங்கு சமையல் உணவுகள் பல உலகளவிலும் பிரபலமானவையாக இருந்து வருகின்றன.
இப்படி ஒர பிரபலமான உணவுதான் கொங்கு நாட்டின் செலவு ரசம்.முன் காலத்தில் சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் வீட்டு தோட்டத்தில் இருந்து வந்து விடும். மசாலா பொருட்களை மட்டும் கடைகளில் சென்று வாங்க வேண்டியதாயிருக்கும்.
எனவே இந்த மளிகை பொருட்களை செலவு பொருட்கள் எனக் குறிப்பிட்டனர். இந்த பொருட்களை பயன் படுத்தி வைக்கப்படுவதால் இந்த ரசம் செலவு ரசம் எனப் பெயரிடப்பட்டது. இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மூன்று குண்டு மிளகாய்
- 6 சிறிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 தக்காளி
- சிறிதளவு சீரகம்
- சிறிதளவு மிளகு
- சிறிதளவு மல்லி
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்த மல்லி தழை
- சிறிதளவு கடுகு
செய்முறை
இந்த செலவு ரசம் செய்வதற்கு மண்பாத்திரம் பயன்படுத்தியால் சுவை அதிகரிக்கும். முதலில் ஒரு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடான பின் மல்லி, சீரகம், மிளகு, வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மண் சட்டியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிய விட வேண்டும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பை போட்டு நன்கு வதக்கி விடவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருந்த மசாலா கலவையை போடவும். இதில் முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்த மல்லியை போட்டு மிதமான தீயில் காய விட வேண்டும். மிதமான தீயில் நன்கு கொதித்த உடன் இறக்கி விடவும். இப்படி செய்தால் சுவையான கொங்கு ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |