pepper chicken: கல்யாண சமையல் பாணியில் பெப்பர் சிக்கன்... எப்படி செய்வது?
பொதுவாகவே திருமண வீடுகளில் சமைக்கப்படும் சமையலுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
திருமண சமையலில் பரிமாறப்படும் உணவுகளுள் பிரியாணி எந்தளவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகின்றதோ அதனுடன் பரிமாறப்படும் பெப்பர் சிக்கனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அசத்தல் சுவையில் கல்யாண வீட்டில் சமைக்கப்படும் பெப்பர் சிக்கனை அதே பாணியில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ கிராம்
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1
சிறிய துண்டு ஏலக்காய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 2
தயிர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகத்தூள் - 1 தே. கரண்டி
கரம் மசாலா - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 1/2 தே. கரண்டி
மல்லித்தூள் - 1 தே. கரண்டி
மிளகுத்தூள் - 2 தே. கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் தக்காளியையும் அரைத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வதக்கிய நிலையில் சுத்தம் செய்த சிக்கனை அதில் சேர்த்து, அதன்பின்னர் அரைத்த தக்காளி மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்க வேண்டும்.
சிக்கன் ஓரளவுக்கு வெந்தவுடன் அதில் மசாலா பொருட்களை சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக வேகவிட வேண்டும். இடையிடையே கிளறிவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்து தொக்கு பதத்திற்கு வந்ததும் 2 ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கொஞ்சம் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லிசேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் பெப்பர் சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |