3 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி... இரட்டிப்பான நன்மையை பெறும் ராசிகள் யார்?
செவ்வாய் கிரகமானது தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இன்னும் சில தினங்களில் பெயர்ச்சியடையும் நிலையில், இரட்டிப்பான நன்மையை பெறும் 5 ராசியினை தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் தற்போது தனுசு ராசியில் இருக்கும் நிலையில் ஜனவரி 16ம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். மகர ராசியில் சுமார் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியடைவார்.
ஜனவரி 16ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு மகர ராசியில் நுழையும் போது, பல கிரகங்களுடன் இணைகின்றது. இந்த பெயர்ச்சியின் போது ஐந்து ராசியினர் இரட்டிப்பான நன்மையை பெறுகின்றனர்.

மேஷம்
மேஷ ராசியில் 10வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடையும் நிலையில், நன்மையை அளிக்கின்றது. மேஷ ராசியினை ஆளும் கிரகம் செவ்வாய் ஆகும். இதனால் இந்த ராசியினர் முக்கியமான பொறுப்புகள் மற்றும் தலைமை பதவியில் இருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் செவ்வாய் பகவான் ஆறாவது வீட்டில் நுழையும் நிலையில், மிகவும் சாதகமாக இருப்பதுடன், வருமானமும் அதிகரிக்கும். ஏனெனில் சிம்ம ராசியினை கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதுடன், செவ்வாய் மற்றும் சூரியனுக்கு இடையே உறவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றியும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியில் செவ்வாய் மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி அடைவதால் நன்மை அளிப்பதுடன், தொழிலில் வெற்றியும் கிடைக்கும். ஏனெனில் செவ்வாய் உங்கள் ராசியினை ஆளும் கிரகமாகும். இதனால் உங்களது நிதி நிலை, செழிப்பு ஏற்படுவதுடன், புதிய தொழில் வாய்ப்பும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியில் செவ்வாய் இரண்டாம் வீட்டில் பெயர்ச்சியாகி, மகர ராசிக்கும் செல்கின்றார். இதனால் தனுசு ராசியினருக்கு பொருளாதார வளர்ச்சிக்காய வாய்ப்பு கிடைப்பதுடன், குடும்பத்துடன் ஆன்மீக தளத்திற்கு யாத்திரை செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

மீனம்
மீனம் ராசியிலிருந்து 11 வீட்டில் பெயர்ச்சி அடையும் செவ்வாயால் சற்று சிரமத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றங்களை தரும். பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும். கடின உழைப்பிற்கு சாதகமான பலன்களை காண்பதுடன் எதிர்காலத்தில் பண வாய்ப்பும் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |