chilly Thai chicken: வீட்டிலேயே எளிமையாக சில்லி சிக்கன் எப்படி செய்வது?
பெரும்பாலும் அசைவ பிரியர்களின் பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பெற்றுக்கொள்கின்றது. சிக்கனை வைத்து என்ன ரெசிபி செய்தாலும் நம்மில் பலர் விரும்பி சாப்பிடுவோம்.
அந்தவகையில், வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் அனைவருக்கும் பிடித்த தாய்லாந்து ஸ்பெஷல் சில்லி சிக்கன் ரெசிபியை மிகவும் எளிமையான முறையில் எவ்வாறு செய்யவாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழி இறக்கைகள் - 250 கிராம்
இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தே.கரண்டி
மீன் எண்ணெய் - 1 தே.கரண்டி
சோயா சாஸ் - 2 தே.கரண்டி
சில்லி சாஸ் - 2 தே.கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், சோயா சாஸ், சில்லி சாஸ், சில சில்லி ஃப்ளேக்ஸ் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கோழி இறக்கைகளை தண்ணீரில் கழுவி நன்றாக சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.
பின்னர் மசாலாப் பொருட்களுடன் கலக்கப்பட்ட பெரிய கிண்ணத்தில் கோழி இறக்கைகளைச் சேர்த்து நன்றாக பிரட்டி மசாலா பொருட்கள் சிக்கனில் நன்றாக கலக்கும் வரையில் ஊறவிட வேண்டும்.
இந்த கலவையை 3 முதல் 4 மணி நேரம் வரையில் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது சோள மாவை சிக்கன் விங்ஸில் தூவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் அவ்வளவுதான், தாய்லாந்து பாணியில் அசத்தல் சுவையில் சில்லி சிக்கன் விங்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |