திருமணத்தின் போது கீழே விழுந்து மண்ணை கவ்விய மணமகன்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்...
திருமணத்தின் போது மணப்பெண்ணை தூக்க முடியாமல் கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்தின் சேட்டைகள்
பொதுவாக திருமணம் என்றாலே வேடிக்கையான விடயங்கள் நடப்பது வழமை. மேலும் திருமணங்களின் போது மணமக்களின் நண்பர்கள் செய்யும் சேட்டைகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருமணத்தின் போது மணமகனை அழைத்து தன்னுடைய வருங்கால மனைவியை தூக்கிக் கொண்டு செல்லுமாறு அங்கிருந்தவர்கள் ஆரவாரப்படுத்தியுள்ளார்கள்.
இதனால் வேறு வழியில்லாமல் மணமகனும் மணப்பெண்ணை தூக்க முயற்சி செய்து கடைசியில் தூக்கியுள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
மணப்பெண்ணை தூக்கிக் கொண்டு படியிலிருந்து இறங்க முயற்சி போது மணமகனின் கால்கள் சமநிலையை இழந்து இருவரும் கீழே விழுந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இவர் மணப்பெண்ணை மீண்டும் தூக்கிக்கொண்டு படியை இறங்கி முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய வருங்கால மணைவியின் நெற்றியில் முத்தமிடுகிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை “joyajaan816” என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்து மணப்பெண்ணை நீண்ட நாட்கள் வைத்து காப்பாற்றுவார் என நம்பிக்கையளிக்கும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.