60 வயதில் இரண்டாம் திருமணம்! மனைவியை முதன்முதலில் எங்கு சந்திருக்கிறார் தெரியுமா?
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணமானது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
60 வயதையுடைய ஒருவர் தனது வாழ்க்கையின் காதலாக ஒரு இளம் பெண்ணை கரம்பிடித்தது குறித்து, நெட்டிசன்களில் பலர் சந்தோஷமும் கொண்டுள்ளனர். சிலர் தேவையற்ற விதத்தில் ட்ரோலும் செய்கின்றனர்.
மிகவும் நெருங்கிய சொந்தங்களுடன் கடந்த 25ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குப் பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது.
இதில் ஆஷிஷ் தனது இரண்டாவது மனைவியான பருராவை ஒரு ஃபேஷன் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்ததன் பின்னர் இருவரும் தங்களின் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன் பின்னர் இருவரும் அதிக நாட்கள் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஆஷிஷ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
இதன் பிறகு நண்பர்களாக இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை கணவன் மனைவியாக வாழ முடிவு செய்துள்ளனர்.
image - the kashmir monitor
இதில் இன்னுமொரு தகவல் என்னவென்றால், தனது தந்தையின் இரண்டாவது திருமணத்துக்கு அவரது மகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமணம் குறித்து கலவையான பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.