இந்த ராசி ஆண்கள் கிடைக்க கொடுத்து வைக்கனும்! கண்ண மூடிகிட்டு உடனே கல்யாணம் பண்ணுங்க..!
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை கிடைத்தால் வாழும் போதே சொர்கம் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் சிறந்த கணவராக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரியான வாழ்க்கை துணைகிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்.
மேஷ ராசி
மேஷ ராசியை சேர்ந்த ஆண் குடும்ப பொறுப்பை ஏற்று, தங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை கவனித்துக் கொள்வதால் அவர்கள் நல்ல கணவர்கள். சில சமயங்களில் முரட்டுத்தனமாக அல்லது ஆக்ரோஷமாகவோ தோன்றலாம்.
ஆனால் அவர்களின் கடினமான ஆளுமையின் பின்னால், அவர்களுக்கு ஒரு மென்மையான பக்கமும் மறைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி ஆண்கள் பொதுவாக தங்கள் துணையை சந்தேகிக்க மாட்டார்கள். கண்டிக்க மாட்டார்கள். துணைக்கு என ஒரு சுதந்திரம் கொடுக்கும் கணவனாகவே இருப்பார்கள்.
கன்னி ராசி
கன்னி ராசி சேர்ந்த ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவியின் செயல்களுக்கு ஊக்கம் தரக்கூடிய கணவனாக இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியை ஆதரிக்கக் கூடியவர்கள். மனைவியின் கனவுகளை நிறைவேற்ற நினைக்கும் இவர்கள், அவர்களுடன் சேர்ந்து போராடுவார்கள்.
அவர்கள் விரும்பும் தொழிலைத் தொடரும்போது அவர்களுக்கு சிரமம் தரக் கூடிய கணவராக இல்லாமல் துணை நிற்பார்கள்.
மீன ராசி
ஆண்கள் எப்போதும் நல்ல கணவராக திகழ்வார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் துணையை கவனித்துக் கொள்ள விரும்புவார்கள். மனைவி மீது அக்கறை செலுத்த கூடியவர்களாகவும் இருப்பார்கள். மனைவியின் அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள்.
அவர்கள் குழந்தைகள் மற்றும் வீட்டு பொறுப்புகளிலிருந்து ஒரு நாளும் பின் வாங்குவதில்லை. தங்களைப் போலவே தங்கள் மனைவிக்கும் சுதந்திரமும், ஓய்வும் தேவை என நினைக்கக் கூடியவர்கள்.