எங்களுக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும்: மனுகொடுக்க மணக்கோலத்தில் ஊர்வலம் செல்லும் இளைஞர்கள்!
50 திருமணமாகாத இளைஞர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும் என குதிரையில் பேரணியாக சென்ற வீடீயோ வைரலாக பரவி வருகிறது.
பொதுவாகவே 90ஸ் இளைஞர்களுக்கு திருமணம் ஆகாது என்று கடுப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமாக யோசித்து கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற இளைஞர்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் பேரணி
மகாராஷ்டிரா சோலப்பூரில் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை எனக்கூறி அதிருப்தி அடைந்த சில இளைஞர்கள், தங்களுக்கு பெண் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மணமகன் கோலத்தில் பாரம்பரிய உடை அணிந்த குதிரை, மேளதாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.
தங்களுக்கு பெண் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மனுவும் அளித்ததுள்ளனர். இந்தப் பேரணியை ஜோதி கிரன்ந்தி பரிஷத் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது.
பெண் கிடைப்பதில்லை
திருமணத்திற்கு பெண் வேண்டும் என கோரி இளைஞர்கள் நடத்திய இந்தப் பேரணியால் மக்கள் கேலி கிண்டல் செய்வார்கள்.
ஆனால் இதற்குஅரசுதான் காரணம் ஆண்- பெண் பாலின விகிதம் குறைபாட்டால் இங்கு பல இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது இல்லை.
அதிக அளவிலான ஆண்கள் மணப்பெண் கிடைக்காமல் திருமணம் முடிக்காமல் இருக்கின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற பாலின விகிதமே உள்ளது. பெண் சிசுக்கொலைகள் காரணமாக இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களுக்கு திருமணமாகாமல் இருப்பது அரசாங்கம் வரை சென்றுள்ளதா என இணையத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.