சண்டையில் சிக்கி கொண்ட கொம்புகள் - பரிதாபமாக பலியான இரு உயிர்
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சங்கமேஸ்வர் தாலுகா கிர்பெட்டில் உள்ள உதகிரி மலை அருகே இரண்டு காட்டெருமைகளின் உடல்கள் கண்டெடுக்கப்படுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சங்கமேஷ்வர் தாலுகாவின் கிர்பெட்டில் உள்ள உத்கிரி மலைக்கு அருகில் சாந்தாராம் ஜெயகடேவ் என்பவருக்கு நிலம் உள்ளது.
மனோஜ் சதானந்த் ஜெயகடே தனது கால்நடைகளை மேய்ப்பதற்காக காட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, உதகிரி மலை அருகே இரண்டு மாடுகள் இறந்திருந்ததைப் பார்த்துள்ளார். இரண்டு மாடுகளின் கொம்புகளும் ஒன்றோடொன்று சிக்கிக்கொண்டிருந்தன.
இந்த மாடுகளின் உடலை பார்க்க கிராம மக்கள் கூட்டம் கூடினர். மனோஜ் ஜெயகடே உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட வனத்துறையினர் காட்டெருமைகளின் உடல்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இரண்டு காட்டெருமைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடும்போது இரு மாடுகளின் கொம்புகளும் ஒன்றுக்கொன்று சிக்கி, விலக முடியாத நிலைக்குச் சென்றதன் காரணமாக இரு காட்டெருமைகளும் இறந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.