இரவு சாப்பிட்ட உடனே இந்த தவறை செய்யாதீங்க... பக்கவிளைவுகள் அதிகமாம்
உடல் ஆரோக்கியத்திற்கு சீரான உணவு என்பது மிகவும் முக்கியமாகும். ஆனால் உணவிற்கு முன்பும், பின்பும் நம்முடைய பழக்கவழக்கங்கள் சில பாதிப்பையும் ஏற்படுத்தும்.
இன்றைய உலகில், நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாட வழக்கங்களில் நீங்கள் சரிசெய்ய வேண்டிய சில விடயங்களை குறித்து தெரிந்து கொள்வோம். இரவு உணவிற்கு பின்பு நாம் தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரவில் சாப்பிட்ட பின்பு தவிர்க்க வேண்டிய விடயம்
இரவில் தாமதமாக சாப்பிடுவது ஹார்மோன் சமநிலையை சீர்குலைப்பதுடன் செரிமானத்தையும் தடுக்கின்றது. வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும். இதனால் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
இதே போன்று சாப்பிட்டவுடன் உடனே தூங்குவது கூடாது. ஏனெனில் இவை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுப்பதுடன், செரிமான செயல்பாட்டிலும் பிரச்சினை ஏற்படும்.
இரவு சாப்பிட்ட பின்பு புகைப்பிடித்தால் கூடாது. இவ்வாறு செய்வது அஜீரணம், நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சிகரெட்டில் உள்ள கார்சினோஜென்கள் கண் எரிச்சலையும், குடல் நோய்களையும் ஏற்படுத்தும்.
உணவிற்கு பின்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இவை மனஅழுத்தம், பதட்டம், தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கும். ஆதலால் உணவருந்தியதும், திரையை அவதானிப்பதை தவிர்க்கவும்.
இரவு உணவருந்திய பின்பு ஓய்வெடுக்காமல் 10 நிமிடம் சிறிய நடைபயிற்சி நன்மை பயக்குவதுடன், செரிமானத்திற்கு உதவுகின்றது. சிறந்த தூக்கத்திற்கும் உதவி செய்கின்றது.
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிப்பதுடன், வயிற்று நொதிகள், சாறுகளை நீர்த்துப் போக செய்கின்றது. அமிலத்தன்மை மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கின்றது. உணவருந்திய பின்பு அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்தே நீர் அருந்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |