3 வேளையும் உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அவ்வாறான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் நாம் ஒருவரையொருவர் பார்த்து பேசுவதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதுடன், சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல் உடம்பை கெடுத்துக் கொள்கின்றோம்.
இதன் காரணமாக பல வியாதிகளை நாம் வாங்கிக் கொள்வதுடன், அதற்கு மருத்துவமனை மருத்துவமனையாக சென்று சிகிசசையும் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு நாம் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கு செலவு செய்யாமல் சரியான முறையில் உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இங்கு நாம் சாப்பிடும் நேரம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வோம்.
காலை, மதிய, இரவு உணவு எப்போது சாப்பிட வேண்டும்?
நாம் காலை எழுந்ததும் 3 மணிநேரத்திற்குள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 7 முதல் 9 மணிக்குள் காலை உணவை முடித்துவிட வேண்டும். இந்த நேரத்திற்கு பின்பு உணவு எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். நமது காலை உணவில் ஓட்ஸ், முட்டை, பால், பச்சை காய்கறிகள் என புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
மதிய உணவானது காலை உணவை எடுத்துக்கொண்ட 5 மணிநேர இடைவெளியில் சாப்பிட வேண்டுமாம்.
இரவு நேர உணவையும் 7 மணியிலிருந்து 9 மணிக்குள் எடுத்துக் கொள்வது வேண்டும். நேரம் தவறி சாப்பிட்டால் செரிமான பிரச்சினை போன்ற நோய்கள் தாக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |