Skin Care:கைகளில் தோல் உரிய என்ன காரணம்? தடுக்கும் வழிமுறைகள் இதோ
இருக்கே சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் தங்குவது, அழுக்குகள் சரும துவாரத்தில் தங்குவது சரும பளபளப்பை மங்க செய்துவிடும். சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளும் வற்றும் போது சருமம் வறட்சி ஆவதை நன்றாக உணர முடியும்.
இதனால் சருமத்தில் பல பிரச்சனைகள் உருவாகும். அதில் அரிப்பு, செதில்களாக இருக்கும். உலர்ந்த திட்டுகள் உருவாகும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் வறண்ட சருமம் என்பது எல்லா வயதினரையும் பாதிக்க கூடிய ஒன்று.
கடுங் குளிர், வறண்ட வானிலை, சூரிய ஒளி, கடுமையான சோப்பு மற்றும் அதிக நேர குளியல் போன்றவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.இப்படி வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் அடிக்கடி தோல் உரியும் பழக்கம் உள்ளது. இதை தடுக்கும் வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
தோல் உரிவதை தடுக்கும் வழிகள்
சருமம் வறட்சியாக இருந்தால் அடிக்கடி கைகளில் தோல் உரியும் இது பொதவான விஷயம். இதற்கு நன்கு வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும். இதனால் கைகள் மென்மையாகி தோல் வறட்சியும் நீங்கும்.
கைகளில் தோல் வறட்ச்சி ஏற்படும் போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என அது கைகளில் அப்படியே இருக்கும். இதனால் நமத கைகளை பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் அருவருப்பாக இருக்கும். இந்த நோயை நாம் பெரிதாக கணக்கில் எடுத்ததுக்கொள்ளலாமல் இருந்தால் அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
இதன்மூலமாக நாம் பல இடங்களுக்கு சென்று வருவோம் அங்கிருந்து நமக்கு பல கிருமிகள் கைகள் வறண்டு இருப்பதால் சுலபமாக தொற்றி கொள்ளும். இது உள்ளே செல்லும் போது நமக்கு நோய்களை தரும். இதை உடனே சரி செய்வது நல்லது.
இதை சரி செய்யாமல் விடும் போது தான் அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படதலால் கைகளில் தோல் உரிகிறது.
இந்த காரணங்கள் தவிர பாக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களாலும் தோல் உரியலாம் என கூறப்படுகிறது. இப்படி தோல் உரிந்தால் என்ன செய்ய வேண்டும்
இதை தற்காலிகமாக இல்லாமல் செய்வதற்கு கைகளில் வைட்டமின் சியை தடவி 10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது கைகளில் ஈரப்பதன் தக்கவைத்து கைகளில் தோல் உரிவது நிறுத்தப்படும் இதனால் கைகளும் பளபளப்பாகும்
இது தவிர கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |