Food Poisoning: இரைப்பையை காவு வாங்கும் ஃபுட் பாய்சனின் அறிகுறிகள் என்ன? மருத்துவ விளக்கம்
நீங்கள் சாப்பிட்ட உணவு ஆரோக்கியமற்றதாக இருந்தால் அது புட் பாய்சன் ஆக மாறும் வாய்ப்புள்ளது. ஃபுட் பாயிசனிங் என்று சொல்லப்படவது மாசுபட்ட அல்லது பழதடைந்த உணவை உண்பதால் வருவதாகும்.
இது பல நுண்ணுயிர்கள் சிறு பூச்சிகள் அல்லது கிருமிகளால் பழுதுபட்டிருக்கும். இந்த உணவுகளை நாம் உண்ணும் போது நமது உடலில் இந்த உணவுகளில் இருக்கும் கிருமிகள் உள்ளே செல்லும்.
இந்த காரணத்தினால் தான் உடலில் பலவெறு உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு இரைப்பை மண்டலமே பாதிக்கப்படுகின்றது. இதனால் உடல் பாதிக்கப்பட்தன் பின்னர் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பிடிப்புகள், தலைவலி, சோர்வு, நீரிழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
இந்த உணவு ஒவ்வாமை யில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபுட் பாயிசனிங் வருவதற்கான காரணங்கள்
நாம் அசுத்தமான உணவுகளை உட்கொள்ளும்போது புட் பாய்சன் ஏற்படுகிறது. சமைத்த அல்லது வேறு உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பது, சரியாக சமைக்காததது அல்லது எக்ஸ்பயரி ஆன உணவுகளை உண்பது போன்றவற்றின் காரணமாக புட் பாய்சன் ஏற்படும்.
உணவு தயாரிக்கும் போது தயாரிப்பவர் சுத்தம் இல்லாமல் கைகள் அழுக்காக வைத்திருந்தால் அதில் இருந்து உணவிற்கு கிருமிகள் செல்ல வாய்பிருக்கும். இந்த கிருமிகள் உணவில் இறங்கி அதை சாப்பிடும் போது நமது உடலில் இறங்கும்.
மேலும், லிஸ்டீரியா, ஈ கோலி, கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் அல்லது நோரோ வைரஸ் போன்ற வைரஸால் புட் பாய்சன் ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களால் தான் புட் பாயிசனிங் வருவதற்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றது.
இந்த நோய் கூடுதலாக குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிரின் கரு, வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நோயெதிர்ப்பு ஆற்றல் குன்றியவர்கள் போன்றோருக்கு எளிதில் வரக்கூடும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள்
உணவு உண்ட பின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். இப்படி புட் பாயிசனிங் வந்துவிட்டால் உணவு உண்ணமுடியாமல் குமட்டல் தன்மை இருக்கும்.
சாப்பிட உணவுகள் உடனே வாந்தியாக வெளியே வரும். தொடர்ந்து எந்த காரணமும் இல்லாமல் காய்ச்சல் வந்துகொண்டே இருக்கும் . வயிற்றுப்போக்கு போய்கொண்டே இருப்பதால் வேலைகளை செய்ய சிரமப்படுவீர்கள்.
வயிற்றில் எப்போதும் பசியின்மை இருக்கும். சாப்பிட முடியாது சாப்பிட பிடிக்காது. இந்த புட் பாய்சனிங் ஆல் ிபாதிக்கப்பட்ட ஒருவர் குளிர் மயக்க உணர்வு மற்றும் அதிக வியர்வையை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் உடலில் கிருமிகள் இருக்கும் வரைக்கும் இருக்கும்.
சிகிச்சை முறை
உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை மற்றும் உணவு கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தினசரி உணவில் காரமான, எண்ணெய், திட உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து சாதுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
இந்த நோரத்தில் தண்ணீர், தயிர் சாதம், தயிர் சேர்த்து கிச்சடி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த அரிசியிலிருந்து வடிகட்டிய நீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
மது, காஃபின் அல்லது சர்க்கரை பானங்களைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியால் இழந்த திரவங்களை குடிநீர் அல்லது வாய்வழி ரீஹைட்ரேஷன் தெரபி மூலம் எடுக்கவும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள கூடாது. மிகவும் முக்கியமாக உணவை ஒரு இரண்டு நாட்களுக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிட கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |