உங்களது குழந்தைகள் படித்த பாடத்தை உடனே மறக்குறாங்களா? அருமையான டிப்ஸ் இதோ
உங்கள் குழந்தை படித்த பாடத்தை உடனே மறக்காமல், அதை ஞாபகம் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகளின் சொத்து என்றால் அவர்கள் கற்றுக்கொள்ளும் கல்வி தான். விளையாட்டில் சுட்டியாக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.
சில குழந்தைகள் படிப்பில் ஆர்வமாக இருந்து நன்றாக படித்து வந்தாலும், சில தருணங்களில் அவர்கள் படித்த பாடத்தை எளிதில் மறந்துவிடவும் செய்வார்கள்.
இவ்வாறான பிரச்சனை அவர்களுக்கு மன அழுத்தத்தையும், படிப்பின் மீது உள்ள ஆர்வத்தையும் குறைத்து விடுகின்றது.
படித்ததை மறக்காமல் இருப்பதற்கு சில விஷயங்களை குழந்தைகள் பின்பற்றி வந்தால் அவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
புரிந்து படிக்க வைக்கவும்
குழந்தைகள் அதிகமான நேரம் படித்து மனப்பாடம் செய்வதை விட புரிந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும். பாடத்தை புரிந்து படித்தால் அது ஞாபகத்தில் இருப்பதுடன், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் வழிவகுக்கும். புரியாமல் பரிட்சைக்காக மனப்பாடம் செய்வது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஞாபம் வைத்துக் கொள்வதற்கு எளிமையான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பது
குழந்தைகள் தாங்கள் படித்த பாடத்தினை தனது நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. இவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்கள் படித்தது அப்படியே ஞாபகத்தில் இருப்பதுடன், ஒருபோதும் மறக்கவும் செய்யாது.
திரும்ப படிக்கவும்
சில தருணங்களில் நண்பர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது மறந்துவிட்டால் உடனே அதனை திரும்பவும் படிக்க வேண்டும். சிலருக்கு காணொளியின் வாயிலாக கேட்டாலே ஞாபகத்தில் நன்றாகவே நிற்கும். நீங்களும் அவ்வாறு இருப்பின் காணொளி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு எந்த வழிகள் சுலபமாக இருக்குமோ அதனை கடைபிடிக்கவும்.
மதிப்பாய்வு செய்யவும்
குழந்தைகள் படிக்கும் போது அதன் மூலம் அவர்கள் என்னவெல்லாம் கற்றுக் கொண்டார்கள் மற்றும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, எவ்வாறு கற்றுக் கொடுக்கின்றனர் என்பதை மதிப்பாய்வு செய்யவும். இவ்வாறு செய்வதால் அவர்கள் படித்தது எப்பொழுதும் மறக்காமல் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |