ஹனிமூன் செல்ல ஒரு சூப்பரான இடம் சொல்லட்டுமா? பூமா தேவியுடன் இனிமையான ஒரு பயணம்..!!
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் சுற்றி பார்க்க போனால் ஒரு வருடம் கூட போதாது. அத்தனை படைப்புகள் மற்றும் இயற்கை அழகு இருக்கின்றது.
அத்துடன் வரலாற்று சான்றுகளும் அளவிற்கு அதிகமாக இங்கு இருக்கின்றது.
அந்த வகையில் இந்தியாவில் மிக இயற்கையாக இன்று வரை இருக்கும் இடம் தான் கேரளா. இங்கு உள்ள கலாச்சாரங்கள், இடங்கள், மக்கள் , மொழி என அனைத்தும் சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிகமாக இங்கு செல்கிறார்கள்.
இதன்படி, கேரளாவில் எம்மை ஒரு நிமிடம் உறைய வைக்கும் இடங்கள் குறித்து நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
1. செம்பரா சிகரம்
வாழ்க்கையில் சாகசங்கள் செய்ய வேண்டும் அல்லது யார் முன்னிலையாவது கெத்து காட்ட வேண்டும் என்றால் இந்த இடத்திற்கு செல்லுங்கள்.
இந்தியாவில் இருக்கும் சிகரங்களில் உயரமான சிகரமாக இது பார்க்கப்படுகின்றது. இன்னொரு சுவாரஸ்யம் இங்கு உள்ளது மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது மொத்த வயல்காடு பகுதியும் கண்ணின் மீது கம்பளம் விரிக்கும்.
1. தங்கும் வசதிகள்
வயநாடு அதிகமாக சுற்றுலா பயணிகளை கவர்வதால் இங்கு அதிகமாக ரிசாட்கள், ஹோட்டல்கள், வீடுகளும் உள்ளன. குழந்தைகளுக்கு விடுமுறை விட்டாச்சு எங்காவது மன நிம்மதியாக இருக்க ஒரு சுற்றுலா போவோம் என முடிவெடுத்தால் கேரளாவில் இது போன்ற இடங்களுக்கு செல்லாம்.
மேலும் கணவன் - மனைவி உறவை மேம்படுத்தவும் இது போன்ற இடங்கள் உதவியாக இருக்கின்றது. எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஹனிமூனுக்கு ஒரு பெஸ்ட் இடம் சொல்லுங்கடா? என என்னிடம் கேட்டால் வயநாடுவை தான் சொல்லுவேன்.
2. பெஸ்ட் டைம்
சுற்றுலா செல்ல பிளான் போட்டால் பரவாயில்லை அக்டோபர் மாதம் தொடங்கி மே மாதம் வரை செல்ல பிளான் போடுங்கள். அப்போது தான் வயநாடில் சீசன் தொடங்குகிறது.
2. எடக்கல் குகைகள்
வயநாடு சென்றால் இந்த எடக்கல் குகையை மிஸ் பண்ணீறாதீங்க. இது தான் வயநாடில் ஸ்பெஷல் என்று கூட கூறலாம். மேலும் 7000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகளில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
3. மீன் முட்டி நீர்வீழ்ச்சி
இந்தியா - கேரளா என்றால் இது தான் முக்கியமான நீர்வீழ்ச்சி. குளிப்பதற்கு போட்டோக்கள் எடுப்பதற்கு இது மிகவும் சிறந்த இடமாகவுள்ளது.
கேரளா சென்றால் இது ஒரு தடவையாவது பார்த்து விட்டு வந்து விடுங்கள். இல்லையென்றால் வாழ்க்கையில் ஏதோ மிஸ் பண்ண போறீங்க -ன்னு அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |