ஊரே மணக்கும் கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்: சிக்கனுக்கு பதிலாக இத ட்ரை பண்ணி பாருங்க!
ஞாயிற்றுக்கிழமைகளில் சில வீடுகளில் எப்போதும் சிக்கன் தான் சமைப்பார்கள்.
ஆனால், இந்த ஞாயிற்றுக்கிழமை புதுவிதமாக சிக்கன், மீன்களை விடுத்து இறாலைக் கொண்டு புதுவித டிஷ் ஒன்று சாப்பிட்டு பாருங்கள்.
உங்கள் நாவுக்கு ஏற்ற புதுவித சுவையாக இருக்கும் இந்த கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்டை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
இறால் ஊற வைப்பதற்கு
இறால் - 20-25
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அந்த இறாலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும். * பின் நெருப்பை குறைவில் வைத்து சில நிமிடங்கள் இறாலை வேக வைக்க வேண்டும்.
இறால் வெந்ததும், நெருப்பை அதிகரித்து, இறாலை நன்கு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் ரெடி