விடாமல் துரத்திய யானை - உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்!
விடாமல் துரத்திய யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முத்தங்கா சரணாலயத்திலிருந்து வயநாடு சரணாலயத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்காக அத்துமீறி நுழைந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை காட்டுயானை துரத்தியது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த நபர் பதறிக்கொண்டு ஓடி வந்தார்.
காட்டுக்குள்ளிலிருந்து ஓடி வந்த அவர் சாலையோரத்தில் திடீரென்று தடுக்கி விழுந்தார். ஆனால், சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களை பார்த்த யானை அவரிடம் நெருங்கிய வராமல் அப்படி நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் யானை பிடியிலிருந்து தப்பி வாகனத்தில் ஏறி உயிர் பிழைத்தார்.
தற்போது இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து அந்த சுற்றுலா பயணிக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.
Jun 3rd '23 - From the Muthanga Sanctuary, Wyanad. Tourist from TN being chased by an elephant after he trespassed into the Sanctuary to take pics. Thanks to the Wayanad Wildlife bus the elephant stopped the chase. The forest dept has imposed a fine/ penalty on the lucky tourist. pic.twitter.com/oy6SDyeIWR
— Nandini Venkatadri?? (@NandiniVenkate3) June 7, 2023