வெயில் காலத்துக்கு ஏற்ற குளு குளு தர்பூசணி குல்ஃபி! செய்வது எப்படி?
அதிகமான வெயிலினால் ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிடக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கத்தோன்றும்.
அந்த வகையில் தர்பூசணிதான் இந்த கோடை காலத்துக்கு மிகவும் ஏற்றது. அதிலும் தர்பூசணியில் குல்பி செய்தால் எவ்வாறு இருக்கும்.
சரி இனி தர்பூசணி குல்ஃபி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - cookpad.com
தேவையான பொருட்கள்
தர்பூசணி - 1 கப் (நறுக்கியது)
எலுமிச்சைச் சாறு - 3 தேக்கரண்டி
சர்க்கரை - தேவையான அளவு
குல்ஃபி அச்சு - 3
image - momobles
செய்முறை
முதலாவதாக தர்பூசணியை வெட்டி அதிலுள்ள அனைத்து விதைகளையும் நீக்கவும். நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். விரும்பினால் வடிகட்டலாம் அல்லது கூழ் போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதன்பின்னர் இந்த தர்பூசணி சாற்றில் 3 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து சிறிது நேரம் அப்படியே விடவும்.
தயாரித்து வைத்துள்ள சாற்றை குல்ஃபி அச்சில் ஊற்றி 4 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். அருமையான தர்பூசணி குல்ஃபி ரெடி.
image - nutured homes