செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்நிலை! புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது என்ன?
நாசாவினால் 2018 முதல் 2022 வரை செய்யப்பட்ட ஆய்வில் பல விஷயங்களை சேகரித்து வந்த நிலையில் தற்போது இங்கு நீர்நிலைகள் காணப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது.
செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ தகுதியான கிரகம் என ஆய்வு செய்யப்பட்டு வந்தது. ஆனால் உயிர்கள் வாழ்வதற்கான அத்திவசிய தேவையான நீர் இங்கு பற்றாக்குறையாக இருந்தது. இதனடிப்படையில் இந்த ஆய்வு 2018 முதல் 2022 வரை ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.
இதுவரை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தற்போது இங்கு நீர் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாடுகளை நிறுத்துவதற்கு முன்பு 1,300க்கும் மேற்பட்ட செவ்வாய் நடுக்கங்களைப் பதிவு செய்தது. இதன்படி இங்குள்ள நீர் செவ்வாய் கிரகத்தின் மேலோட்டத்தில் ஏழு முதல் பன்னிரண்டு மைல்கள் 11.5 முதல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கலாம் என்று ஏபிசி அறிவித்துள்ளது.
இதன்போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் ஒருவேளை பெருங்கடல்கள் இருந்தபோது இந்த நீர் நிலத்தடி விரிசல்களில் ஊடுருவியிருக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு பார்த்ததற்கு பின்னரே இதை உறுதி செய்ய முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |