இந்த நேரத்தில் மறந்தும் கூட சாப்பிட்டு விடாதீர்கள்! சோறே சிறந்த உணவு
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதிலேயே ஆரோக்கியம் அடங்கியுள்ளது, பலரும் வெள்ளை அரிசியை ஒதுங்கத் தொடங்கிவிட்டார்கள், ஆனால் இது சரியான ஒன்றா? என்ற சந்தேகமும் பலருக்கும் இருக்கும்.
இதற்காக பதிலாக தான் பதிவு,
3 நேரமும் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
எதை சாப்பிடுகிறோம் என்பதை வைத்து உடல் எடை குறைவதில்லை. நம் உடலுக்கு தேவையான சக்தியை விட நாம் குறைவாக சாப்பிடும் போதுதான் உடல் எடையைக் குறைக்க முடியும். கொழுப்பு குறையவேண்டுமென்றால் அன்றாடம் சாப்பிடுகின்ற உணவில் அது சோறாக இருக்கலாம், சப்பாத்தியாக இருக்கலாம், சொக்லேட் ஆகக் கூட இருக்கலாம். நமக்கு தேவையான சக்தியை விட குறைவாக சாப்பிட்டாலே உடல் எடை தானாகக் குறையத் தொடங்கும்.
குழந்தைகள் சப்பாத்தியுடன் சீனி, ஜாம் போன்றவற்றுடன் சாப்படுவது ஆரோக்கியமானதா?
குழந்தைகளுக்கு 10 வயது வரை சீனி, ஜாம் போன்ற இனிப்புப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு முற்று முழுதாக பழங்களிலிருந்து கிடைக்கும் சத்துக்களே தேவைப்படுகின்றது.
இந்த சீனி, ஜாம் போன்றவை ஒருவித அடிமைத் தனத்துக்குள் அவர்களை கூட்டிச் சென்றுவிடும். சிறுவயதிலிருந்தே அதிகப்படியான இனிப்புச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சர்க்கரையின் வீதம் மிகவும் அதிகமாகின்றது.
அவர்கள் பெரியவர்களாகும்போது நீரிழிவு, ஹோர்மோன் சார்ந்த பிரச்சினைகள், அதிகளவான பதட்டம் போன்ற பல நோய்கள் வரலாம். எனவே குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட சீனி சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஜேம் தொடர்பான இந்த ஆரோக்கிய பாதிப்புக்கள் பெரியவர்களுக்கும் பொருந்துமா?
பெரியவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
பழைய சோறு சாப்பிடுவது எந்தளவுக்கு ஆரோக்கியமானது?
பழைய சோற்றில் அயன் 75 சதவீதமாக மாறுகிறது. அனீமியா இருப்பவர்கள் அனைவரும் பழைய சோற்றை சாப்பிட வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் ஓட்ஸ், தோசை என்று சாப்பிடாமல், பழைய சோற்றை தயிர், வெங்காயத்துடன் சாப்பிடலாம். பழைய சோற்றில் B6,B12 என இரண்டு விட்டமின்கள் உள்ளன.
இது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயம். அதுமாத்திரமின்றி பழைய சோற்றில் உற்பத்தியாகும் பக்டீரியா நோயெதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. வெயில் காலத்தில் காலையில் குழந்தைகளுக்கு பழைய சோறு கொடுத்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதிலிருக்கும் நீர் அவர்களின் வயிறுக்கு மிகவும் நல்லது.
நீரிழிவு நோயாளிகள் பழைய சோறை சாப்பிடும்போது சர்க்கரை அளவு அதிகரிக்காது. வேலை செய்பவர்களுக்கு இதுவொரு சிறந்த காலை உணவு. இந்த பழைய சோறு மீண்டும் வரவேண்டும்.
நாம் உண்ணும் ப்ரைட் ரைஸ், செஸ்வான் ரைஸ் என்பன எந்தளவு ஆரோக்கியமானது?
கடைகளில் வாங்கும் எல்லா உணவுகளும் ஆரோக்கியமற்றதுதான். அதில் உபயோகப்படுத்தப்படும் சேர்மானங்கள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ப்ரைட் ரைஸ் கூட எண்ணெய் இல்லாவிட்டால் சிறந்ததொரு உணவுதான். இதிலிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் அதில் எண்ணெய் எந்தளவு இருக்கின்றது என்பதுதான்.
ப்ரைட் ரைஸ் என்பவற்றை இரவு நேரங்களில்தான் போய் உண்ண வேண்டும் என நினைக்கிறார்கள் இது எந்தளவு சரியானது?
ஆரோக்கியமற்ற ஒரு பழக்கம். இரவு நேரம் என்பது நாம் ஓய்வெடுப்பதற்கான நேரமாகும். இரவு 9 மணியிலிருந்து காலை 9 மணிவரை எதுவும் சாப்பிடக் கூடாது. காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாப்பிடலாம். அந்த நேரத்தில் எதை உண்டாலும் அது ஆரோக்கியமற்றதே.
இரவில் தயிர்சாதம் சாப்பிடுவது நல்லதா?
தயிர் சாதம் ஆரோக்கியமற்றதில்லை. இதில் கார்போவைதரேற்று அதிகமாக உள்ளது. சாதாரணமாக சோறு உண்பதைக் காட்டிலும் தயிர் சாதம் உண்பது நல்லது. உறங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக சாப்பிடுங்கள்.
பாஸ்மதி அரிசியும் ஆரோக்கியமற்றதாக மாறுகிறதா?
பாஸ்மதி அரிசிக்கும் சாதாரண அரிசிக்கும் கலோரிகள் அடிப்படையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு நாளைக்கு தேவையான கலோரிக்கு அதிகமாக என்ன உண்டாலும் அது ஆரோக்கியமற்றதுதான். குறிப்பாக, இரவு உணவுகளை வெளியில் சென்று உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சப்பாத்தி, சோறு இரண்டில் எது சிறந்தது?
சோறே சிறந்தது. சோறை சாப்பிடும்போது அதை கரண்டியில் எடுத்து அளவெடுத்து அதனுடன் காய்கறிகள், பருப்பு வகைகளைச் சேர்த்து சாப்பிட வேண்டும்.