50 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காமல் வாழும் கோடீஸ்வரர் வாரன் பப்பெட்! வியப்பூட்டும் பழக்கம்
Warren Buffett habit: உலகின் முன்னணி கோடீஸ்வர முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பப்பெட், கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, தனக்குப் பிடித்தமான கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களையே விரும்பிக் குடித்து வரும் விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சுவாரசியமான தகவலைப் பிரபல முதலீட்டாளர் பில் அக்மேன், 'ஈக்விட்டி மேட்ஸ் இன்வெஸ்டிங்' என்ற பாட்காஸ்டில் பகிர்ந்துள்ளார்.

வாரன் பப்பெட்டின் வித்தியாசமான பழக்கம்!
வாரன் பப்பெட்டுடன் இரவு விருந்தில் பங்கேற்றபோது, அவருக்குத் தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் வேண்டுமா எனக் கேட்டதாகவும், அதற்குப் பதிலாகக் குளிர்பானங்களையே விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும் பில் அக்மேன் குறிப்பிட்டுள்ளார்.
கோக் மற்றும் பெப்சி மீது அதிக விருப்பம் கொண்ட வாரன் பப்பெட்டை அவரது மகன் ஹோவர்ட் பப்பெட் செல்லமாக 'பெப்சி வாரன்' என்று தான் அழைப்பாராம்.

2015ஆம் ஆண்டு 'பார்ச்சூன்' இதழுக்கு அளித்த பேட்டியில், தினமும் குறைந்தது ஐந்து கோகோ கோலா பாட்டில்களைக் குடிப்பதாக வாரன் பப்பெட் தெரிவித்திருந்தார். மேலும், தனது தினசரி 2,700 கலோரி உணவில் கணிசமான அளவு கோகோ கோலா மூலம் கிடைப்பதாகவும் கூறியிருந்தார்.
குறிப்பாக, 1986ஆம் ஆண்டு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் 'செர்ரி கோக்' குளிர்பானத்தை அதிகாரப்பூர்வ பானமாக அறிவித்ததும் அவரது குளிர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது தான். தண்ணீர் குடிக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. உடலை நீரேற்றமாக வைக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
உயிர் வாழ முக்கியமான ஆதாரமாக இருக்கும் தண்ணீரை, வாரன் பஃபெட 48 ஆண்டுகளுக்கும் மேலாக குடிக்காமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு தண்ணீருக்குப் பதிலாகக் குளிர்பானங்களை அதிகம் விரும்பிக் குடிக்கும் வாரன் பப்பெட்டின் வித்தியாசமான பழக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |