சிறுநீர் பாதையில் தொற்று உள்ளதா? சுலபமாக போக்க சில வழிகள்
சிறுநீர் பாதை தொற்றானது பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு நோயாக உள்ளது. இந்த நோயை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை மருத்தவர்கள் எச்சரித்துள்ளதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீர் பாதை தொற்று
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு தேவையானவற்றை எடுத்து உடலுக்கு தேவையில்லாதவையை வெளியேற்றும் செயற்பாட்டை இந்த சிறுநீரகம் தான் செய்கிறது.
இந்த செயற்பாட்டை சிறுநீரகம் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் செய்கிறது. உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்ற கூடிய இந்த பகுதி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இந்த பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால் சிறுநீரகங்கள் இழக்கும் சந்தர்ப்பமும் வரும்.
இந்த தொற்று ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும். இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 3 முதல் 4 லீட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
இளநீர், மோர், எலுமிச்சை சாறையும் அவ்வப்போது குடிக்க வேண்டும். சர்க்கரை நோய், உடற்பருமன், குடும்பத்தில் யாருக்கேனும் இத்தொற்று பாதித்திருத்தாலும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இந்த பாதிப்புகள் இருந்தால் உடனே வதை்தியரை நாட வேண்டும்.