வாட்ஸ் அப் குரூப்பில் அடுத்த அசத்தலான அப்டேட் - மகிழ்ச்சியில் பயனாளர்கள்
உலகில் வாட்ஸ் அப் செயலியை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காலையில் எழுந்தவுடன் இருந்து இரவு தூங்கும் வரை வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாத நபர்களே இல்லை.
அந்த அளவிற்கு வாட்ஸ் அப் அரட்டை செயலி பிரபலமான ஒன்று. அடிக்கடி இந்நிறுவனம் ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கி வரும்.
அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட்டை வழங்கி இருக்கிறது. அதன்படி வாட்ஸ் அப் குழுவில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்து வெளியேறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளனர்.
அதாவது, ஒருவர் ஒரு குழுவில் இருந்து வெளியேறும் போது, யார் அந்த குழுவில் இருந்து வெளியேறினார் என்ற அறிவிப்பு அதில் வரும்.
ஆனால், இனி வரக்கூடிய நாட்களில் குழுவிலிருந்து யார் வெளியேறினாலும் அதன் அட்மின் மட்டுமே தெரிந்து கொள்ளும்படி புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே இந்த அப்டேட் விரைவில் வாட்ஸ் அப்பில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.