அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெயில் இரண்டு பொருள் கலந்தால் போதும்
பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த வகையில் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியால் நல்ல பலன் கிடைக்கும்.
தலையை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கும் அதை சீராக பராமரிப்பதற்கு நாம் வீட்டில் தெங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில் தேங்காய் எண்ணெயுடன் இரு பொருட்களை கலந்து பூசும் போது முடி நீளமாக வளரும் என கூறப்படுகின்றது. இதை முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
தலைமுடி வளர்ப்பதில் பல பிரச்சனை இருப்பவர்கள் இளநரை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தலைமுடியில் தடவலாம்.
இதை மறுக்காமல் தடவும் போது முடி வலுவடைவதோடு, முனை பிளவு பிரச்சனையும் தீரும். வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய வேப்ப
இலையை பொடி செய்து அதனுடன் இலவங்கப்பட்டை பொடி, வைட்டமின் ஈ எண்ணெய் என அனைத்தையும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசும் போது முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாவதை உணர்வீர்கள்.
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை தலைமடிக்கு பயன்படுத்தில் முடி ஊட்டம் பெறும்.
இதற்கு கறிவேப்பிலை எண்ணெய்யை தயாரிக்க வேண்டும். இதை பயன்படுத்தும் முறை முதலில் உங்கள் தலைமுடியை நன்றாக சீவவும். அதன் பிறகு, இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி, லேசான கைகளால் மசாஜ் செய்யவும்.
ஒரே இரவில் அல்லது குறைந்தது 2 மணிநேரம் அப்படியே விடவும். பின்னர் இதை நீங்கள் நன்றாக கழுவிட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த எண்ணெயைத் தடவி வந்தால், முடி வேகமாக வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |