துபாயில் நடந்த கார் விபத்து.. உள்ளே நடிகர் அஜித்குமார் இருந்தாரா?
நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.
இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
அஜித் குமார் சினிமாவை போல் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அந்த வகையில், இவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அண்மை காலமாக துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
விபத்துக்குள்ளான கார்
இந்த நிலையில், பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் அஜித்குமாரின் கார் வேகத்தில் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி பலமுறை சுழன்று நின்றது.
இந்த விபத்தில் அஜித் குமாருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என அஜித் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. விபத்து தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியாகியுள்ளது.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |