Medical Facts: பெண்களை அவஸ்தைக்குள்ளாக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை- உடனே தடுப்பது எப்படி?
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று தான் சிறுநீர் கசிவு.
தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதனை மருத்துவ ரீதியாக சிறுநீர் அடங்காமை ( urinary incontinence) என்று அழைக்கப்படுகிறது. உடல்நலப் பிரச்சனைகள் குறித்து மோசமான புரிந்துணர்வே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் சிறுநீர் அடங்காமை பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சிறுநீர் கசிவு
சிறுநீர் கசிவு என்பது தூங்கும் போது படுக்கையில் மட்டுமல்லாமல் அதிக எடை தூக்கும் பொழுது, சிரிக்கும் பொழுது மற்றும் தும்மும் பொழுது ஏற்படும். அதிலும் குறிப்பாக சிலருக்கு விளையாடும் பொழுது, உடலுறவு வைத்து கொள்ளும் பொழுதும் ஏற்படலாம். இதனை பல சந்தர்ப்பங்கள் நாம் அவதானித்திருக்கலாம். ஆனாலும் பெரிதாக மருத்துவர்கள் சென்று கவனிப்பது குறைவு.
இது போன்ற பிரச்சினைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகின்றது. அதாவது, சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலை சிறுநீர் கசிவு எனப்படுகிறது. இந்த பிரச்சினையை பெற்றோர்கள் அல்லது கணவரிடம் அவசியம் கூறி மருத்துவரை சந்திப்பது சிறந்தது. சிறுநீர் கசிவால் எங்கே தங்களிடமிருந்து சிறுநீர் வடை வீசுமோ எனறு மனதளவிலும், உடலளவிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பிற்கான காரணங்கள்
1. சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதற்கான முக்கிய காரணம் pelvic floor muscles எனப்படும், கருப்பை மற்றும் சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் எனப்படும் தசைகளின் பலவீனமடைதலாகும். இதனை கட்டுப்படுத்த முடியாமல் இது நிகழ்கிறது.
2. உடல் பருமன், கடினமான யோனி பிரசவம், கர்ப்பத்திற்கு பிந்தைய காலத்தின் விளைவாக இடுப்பு தரையில் அழுத்தம் அதிகரித்தல்.
3. பிற நரம்பியல் சிக்கல்களை தவிர, குறுகிய கால கர்ப்ப இடைவெளிகள், இடைவிடாத இருமல் அல்லது நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்தல் உள்ளிட்டவைகளும் காரணமாக அமையலாம்.
தடுக்கும் வழிமுறைகள்
1. நோய் நிலைமை பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
2. 24 மணி நேரத்தில் நீங்கள் எடுத்து கொள்ளும் நீர் உட்பட திரவங்களின் அளவை சராசரி பட்டியலாக பராமரிக்க வேண்டும்.
3. சிறுநீர்ப்பை பயிற்சிகளை மேற்கொள்ளல். அதாவது அடிக்கடி சிறுநீர் வருவது போன்று இருந்தால் அதனை கட்டுபடுத்தி 1 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். ஏனெனின் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கூட இதற்கு முக்கிய காரணமாக அமையலாம்.
4. உடல் பருமன் என்பது தூண்டுதல் மற்றும் தீவிர மன அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புப்பட்டு காணப்படுவதால் சிறுநீர் கசிவு ஏற்படலாம். எனவே உடல் எடை குறைப்பது சிறுநீர் கசிவை தடுக்கும் முக்கிய வழிமுறையாகும்.
5. சிறுநீர்ப்பை எரிச்சல் உணர்வு இருந்தால் காஃபின், சாக்லேட், காரமான உணவுகள், அமில சாறுகள், செயற்கை இனிப்புகள் ஆகிய உணவுகளை எடுத்து கொள்ளாமல் தவிர்ப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |