யாராவது உங்க WhatsApp யூஸ் பண்றாங்களா? செக் பண்ண இதோ டிப்ஸ்
மக்களின் வாழ்வில் வாட்ஸ்அப் ஒரு முக்கியமான செயலி. உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரே பிரபலமான செயலி இது.
வாட்ஸ்அப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், பல சாதனங்களை இணைக்கும் திறனை இந்த தளம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்த செயலி மூலம் மக்கள் மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை ஷேர் செய்வது முதல், அலுவலகம் தொடர்பாக பயன்படுத்துவதுவரை இன்னும் பல விடயங்களை செய்கின்றனர்.
எனவே இந்த செயலியிக்கும் நமக்கும் இந்த தொடர்பை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
நம்முடைய வாட்ஸ்அப் அக்கவுன்டை ஹேக் செய்து அதனை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே அதை கண்டுபிடிப்பதற்கான டிப்ஸ் கீழே தரப்பட்டுள்ளது பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
WhatsApp ஹேக் கண்டுபிடிக்க டிப்ஸ்
1. முதலில் செட்டிங்ஸ்’ ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதில் ‘லிங்க்டு டிவைசஸ்’ என்பதை கிளிக் செய்யவும். இதில் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆக்டிவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் காட்டும்.
2.அதில் உங்களுக்கு ஏற்கனவே தெரியாத பழக்கம் இல்லாத சாதனம் அல்லது பிரௌசர் இருப்பதை நீங்கள் கவனித்தால் உடனடியாக அதனை கிளிக் செய்து லாக்-அவுட் செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து சாதனங்களில் இருந்தும் லாக்-அவுட் செய்யலாம்.
3.அடுத்து அனுப்பாத மெசேஜ்கள், பரிட்சயம் இல்லாத வாட்ஸ்அப் குரூப்புகள் அல்லது உரையாடல்கள் இருப்பதை நீங்கள் கவனித்தால், உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுண்டை வேறு யாரோ பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி.
அல்லது நமது லாஸ்ட் சீன் அல்லது நாம் ஆன்லைனில் இல்லாத நேரத்தில் ஆன்லைன் காட்டுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் நமது வாட்ஸ் அப் அக்கௌன்ட் வேறு யாரோ கையில் மாட்டி உள்ளது என்பதற்கான அறிகுறி.
பாதுகாக்கும் முறை
வாட்ஸ்அப் அக்கவுன்ட் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு வாட்ஸ்அப்பில் உள்ள ‘Account Security’ என்பதற்கு சென்று ‘Show Security Notification ‘செக்யூரிட்டி கோடு’ ‘Encryption Notification’என்பதை எனேபிள் செய்ய வேண்டும்.
யாராவது உங்களுடைய என்கிரிப்ஷன் குறியீட்டை மாற்றும்போது அதற்கான நோட்டிஃபிகேஷனை உங்களுடைய மொபைல் போனில் பெறுவதற்கு Settings Account Security என்பதில் உள்ள ‘ Show Security Notification ’ என்பதை Enabled செய்ய வேண்டும்.
வேறு ஒருவர் உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுன்டை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதி செய்துவிட்டால் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களில் இருந்தும் Lock-out செய்யுங்கள்.
மேலும் 2 Step verification ஆன் செய்வதன் மூலமாக கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கலாம். சந்தேகத்திற்குரிய Applications அல்லது Delete files செய்யுங்கள். இறுதியாக இது குறித்து WhatsApp சப்போர்ட்டில் புகார் கொடுக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |