நடைபயிற்சியின் போது இந்த தவறுகளை செய்திடாதீங்க! என்னென்னனு தெரியுமா?
By Manchu
நாம் அன்றாடம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நமது உடலை எந்தவொரு பிரச்சினை இல்லாமல் வைத்துக் கொள்வதற்கு நடைபயிற்சி என்பது முக்கியமாக தேவைப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இன்று பெரும்பாலான நபர்கள் தனது உடல்டையைக் குறைப்பதற்கு நடைபயிற்சியினையும் மேலும் சில உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இன்று மனிதர்கள் செய்யும் வேலைகளை தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிஷின்களும், வாகனங்களும் செய்து முடித்துவிடுவதால், பெரும்பாலான மனிதர்கள் சோம்பலுடன் காணப்படுகின்றனர்.
ஆனால் அன்றாட வேலைகளை அமர்ந்த இடத்திலிருந்து செய்யும் நபர்களுக்கு நடைபயிற்சி என்பது முக்கியமாகும். இவ்வாறான நடைபயிற்சி மேற்கொள்ளும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் மட்டுமாவது நடைபயிற்சி மேற்கொள்ளவது சிறந்தது. நடைபயிற்சிக்கு ஏற்ற ஷுவை அணிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மூட்டு தேய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
- நடைபயிற்சியின் போது கை மற்றும் கால்களை நன்றாக வீசி நடக்க வேண்டும். இவ்வாறு மேற்கொண்டால் தான் உடம்பில் இருக்கும் தேவையில்லாத கலோரிகள் குறையும். ஆரம்பத்தில் எவ்வாறு நடக்க ஆரம்பிக்கிறீர்களோ அதே போன்றே இறுதிவரை நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- நடைபயிற்சியை உடற்பயிற்சி செய்வதால் தான் கலோரி அளவு கட்டுக்குள் வைக்கமுடியும். ஆனால் நேர் கொண்ட பார்வையுடன் முதுகுத்தண்டை நேராக வைத்து நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்பட வாய்ப்புள்ளது.
- நடைபயிற்சி மெற்கொள்ளும் நமது கவனம் அதில் மட்டுமே இருக்க வேண்டுமாம். அப்பொழுது உடலில் கொழுப்பு குறைவதுடன், உடம்பும் பிட்டாக இருக்கும்.
- நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தினை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். நேரத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வரக்கூடாது. மேலும் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொ்டவுடன் சிறிது நேரம் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US