நடைப்பயிற்சியில் இத்தனை வித்தியாசங்கள் இருக்கா? தெரிஞ்சிட்டு நடக்க ஆரம்பிங்க!
பொதுவாக நாம் அதிகமான நடைப்பயிற்சிகளை மேற்கொண்டால் நோய்களின்றி சுகமான ஒரு வாழ்க்கை வாழலாம் என பெரியார்கள் கூறுவார்கள்.
எமது முன்னோர்கள் இருந்த காலங்களில் பெரிதாக வாகனங்கள் இல்லாத காரணத்தினால் பெரும்பான்மையான இடங்களுக்கு நடப்பயணங்களை தான் மேற்க்கொள்வார்கள்.
இதனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், தசை பிடிப்பு இது போன்ற நோய்கள் இருக்காது.
அந்த வகையில் நடைப்பயிற்சிகளை வித்தியாசமான முறையில் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
Image - Bordgains
1. பின்னோக்கி நடத்தல்
கால்களை முன்னோக்கி வைக்காமல் சற்று பின்நோக்கி வைத்து நடக்க வேண்டும். இது கடினமான விடயமாக இருந்தாலும் இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் இவ்வாறு நடப்பதால், உடலின் சமநிலை, நிதானப்போக்கு, தசைகள், மூட்டு, கணுக்கால் உள்ளிட்ட பாகங்கள் வலுவடையும். அத்துடன் தசைநார்கள் சீராக இயங்கும், முதுகு வலி குறையும், மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
மேலும் இவ்வாறான நடைப்பயிற்சிகளை நரம்புக் கோளாறு உள்ளவர்கள், நடப்பதில் சிரமம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்கலாம்.
Image - Maalaimalar
2. மெதுவான நடைப்பயிற்சி
இதனை காலையில் மேற்க் கொள்வது சிறந்தாக இருக்கும். அந்த வகையில் இவ்வாறு நடப்பது உடலை மட்டுமில்லாமல் மனதை இலகுவாக மாற்றும்.
அமைதியும், நிதானமும் உண்டாகும். அத்துடன் மன அழுத்தம், முழங்கால் வலி, மன சோர்வு ஆகிய பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இதனமான பாடல்களுடன் இது போன்ற பயிற்சிகளில் ஈடுப்படலாம்.
Image - Tamil News Asianet News
2. பவர் வாக்கிங்
பவர் வாக்கிங் வேகமான நடைப் பயிற்சியின் மேம்பட்ட நிலை. கண்களை முன்னோக்கி, தோள்களை பின்புறம் தள்ளி, தலை நிமிர்ந்து மற்றும் வயிற்றை உள்ளிழுத்து நடக்கும் ஒரு பயிற்சிமுறையாகும்.
மேலும் கைகளை 90 டிகிரிக்கு வளைத்து, எதிரெதிர் கைகள் மற்றும் கால்களை முன்னோக்கிச் செல்லும் வகையில் வீசி நடக்க வேண்டும்.
இதனால் உடல் எடை, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, கொழுப்பு ஆகியவை குறையும். உயர் ரத்த அழுத்தம் சீராகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
Image - Boldsky Tamil
|